உலகம்

ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவு: இமாலய வெற்றி பெறுகிறார் புதின்

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அதிபர் புதின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராவது மீண்டும் உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்/ ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் ...

Read More »

பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எச்சரிக்கை!! ஹிட்லரை போல் ஈரான் தலைவர் அயத்துல்லாவால் ஆபத்து: சவுதியும் அணு ஆயுதம் தயாரிக்கும்-

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்தால் நாங்களும் அதை பின்பற்றுவோம் என்று சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் (32) எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வரும் திங்கள்கிழமை அமெரிக்கா வரவுள்ளார். முன்னதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இதில் இளவரசர் சல்மான் கூறியதாவது: சவுதி அரேபியா அணு ஆயுதம் தயாரிக்க விரும்பவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் ...

Read More »

எத்தியோப்பியாவில் பேருந்து விபத்து: 38 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 38 பேர் பலியாகினர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “எத்தியோப்பியாவில் லுகம்போ மாவட்டத்திலுள்ள அம்ஹரா மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பேருந்திலிருந்த 38 பேர் பலியாகினர். இதில் ஆண்கள் 28 பேர். பெண்கள் 10 பேர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து எத்தியோப்பியா போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

ட்ரம்ப் இன் அடுத்த நடவடிக்கை இதோ! சீனப் பொருட்களுக்கு தடை

தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதுமுதல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று கொள்கையை கடைபிடித்து வருகிறார். அதன்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கே அமெரிக்காவில் முன்னுரிமை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. குறிப்பாக சீன பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் ...

Read More »

நான் கடவுள்: அந்தரத்தில் பறந்த விமானத்தில் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ!

அமெரிக்காவில் விமானம் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது பெண் பயணியொருவர் கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து இதாகோ மாகாணம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.அப்போது விமானத்தில் இருந்த ஒரு பெண் திடீரென நான் கடவுள், நான் கடவுள் என கத்தி கொண்டே விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த பெண்ணை போராடி தடுத்தனர். பின்னர் விமானமானது எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தடைந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை விசாரிக்க அதிகாரிகள் ...

Read More »

சபரிமலையில் விமானநிலையம்: மார்ச் 31-ம் தேதி முடிவு:

கேரள மாநிலம், சபரிமலையில் விமானநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை வரும் 31-ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரம், சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று பேசியதாவது: பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வருகையை எளிதாக்கும் வகையில், விமான நிலைம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய லூயிஸ் ...

Read More »

ட்ரம்பைக் காட்டிலும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் போலி கணக்கு உள்ள பாலோவர்ஸ் அதிகமா உள்ளனர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும், ட்விட்டரில் பிரதமர் மோடிக்குதான் போலியாக கணக்குவைத்து பின்தொடர்பவர்கள் ( பாலோவர்ஸ்) அதிகம் என்று ட்விட்டர் ஆடிட் அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலக அளவில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மிகவும் புகழ் பெற்ற தலைவர்களாக வலம் வருபவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடியும் குறிப்பிடத்தகுந்தவர்களாவர். இதில் ட்ரம்பைக்காட்டிலும் மோடிக்கு ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ட்விட்டர் கணக்கு குறித்து தணிக்கை செய்யும் ‘ட்விப்லமேசி’ அமைப்பு உலகத் தலைவர்களின் ட்விட்டரில் பின்தொடர்பவர்களில் எத்தனை ...

Read More »

அனகொண்டா’ விழுங்குவதற்காக தன்னை தந்தவர்

அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 26ரு அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார் என்றால் மயிர் கூச்செரியச்செய்கிறது அல்லவா?அந்த அபூர்வ மனிதர், ரோசலி. அமெரிக்காவை சேர்ந்த இவர் வனவிலங்கு தொடர்பான ஆவணப்படங்கள் எடுப்பதில் மன்னர்.டிஸ்கவரி சேனலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பாகி, பரபரப்பை ஏற்படுத்தப்போகும் படத்தின் படப்பிடிப்புக்காகத்தான் அனகொண்டாவுக்கு, ரோசலி தன்னை விழுங்கக்கொடுத்தார்.இந்த அனகொண்டாவை பிடிப்பதற்காக பெரு நாட்டின் மழைக்காடுகளில் 12 பேர் கொண்ட குழுவுடன் இவர் 60 நாட்கள் தங்கி ...

Read More »

000 முதலைகள் இருந்த குளத்தில் விழுந்து 65 வயது பெண் தற்கொலை. தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்.

தாய்லாந்தில் உள்ள 65 வயது பெண் வித்தியாசமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் அங்குள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு சென்று 1000க்கும் மேல் முதலைகள் இருக்கும் ஒரு குளத்தில் விழுந்தார். அதில் இருந்த முதலைகள் அவரை கடித்து குதறிய பயங்கரமான காட்சியை கண்டு மிருகக்காட்சி சாலைக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு வந்த Wanpen Inyai என்ற 65 வயது பெண், சுமார் 1000 ...

Read More »

துருக்கியில் சிக்கிய இரட்டைத் தலை சயாமிஸ் டால்பின்

துருக்கியில் இரட்டை தலைகள் கொண்ட இறந்த நிலையில் ஒரு டால்பின் கடற்கரையில் கரை ஒதுங்கியது. ஒரு உடல், இரண்டு தலைகளுடன் கூடிய இந்த சயாமிஸ் டுவின்ஸ் டால்பின் மிகவும் அரிதானது. துருக்கியின் மேற்குக் கரை நகரமான இஸ்மில் என்ற நகரின் கடலோரத்தில் இது மிதந்து வந்தது. துக்ருல் மெடின் என்ற விளையாட்டு ஆசிரியர் இதைப் பார்த்து தகவல் தெரிவிக்கவே மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். இந்த டால்பினுக்கு ஒரு வயது இருக்கும். 3.2 அடி நீளமே உள்ளது. இரண்டு தலைகள், ஒரு உடல், வாலுடன் ...

Read More »