உலகம்

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா ...

Read More »

குவைத்தில் பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணி முடிந்து தங்களது இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

Read More »

தனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்

தனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக், நமோ ஆப்ஸ் போன்றவற்றில் இருந்து மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றன என்று புகார்கள் எழுந்தநிலையில், டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைச் சட்டத்தில் கடுமையான பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், விரைவில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் செயல்பாட்டுக்கு் வர உள்ளது. அப்போது, மக்களின் ...

Read More »

9 ஆயிரம் கோடி கடன் களேபரத்திலும் அசராத விஜய் மல்லையா: 2011-ம் ஆண்டு முதல் தன்னுடன் வாழ்ந்து வரும் பெண்ணுடன் 3-வது திருமணம்?

தொழிலதிபர் விஜய் மல்லையா தன்னுடன் நீண்டகாலத் தொடர்பில் இருக்கும் பிங்கி லால்வாணியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் புரூவெரீஸ் மதுபான நிறுவனம், எப்ஒன் ரேஸ், கிரிக்கெட் அணி என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் விஜய் மல்லையா. கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு விஜய் மல்லையா தப்பி சென்றதால், அவர் ...

Read More »

அணு ஆயுத சோதனையை நிறுத்த தயார்’’ – அமெரிக்காவுக்கு வட கொரியா நிபந்தனை

அமெரிக்கா, தென்கொரியா எங்களின் நல்லெண்ண முயற்சிக்கு ஒத்துழைத்தால் அணுஆயுத சோதனை விவகராம் தீர்க்கப்படும் என்று சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வடகொரிய அதிபர் கொன் ஜோங் உன் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா வந்திருக்கிறார். கிம்மின் இந்தச் சீன பயணம் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை சினுவா உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டன. இந்த நிலையில் கிம்மின் சீனப் பயணத்தை சீன ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தின. கிம் ...

Read More »

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட சீனா விட்டுக் கொடுக்காது: ஜி ஜின்பிங்

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு சீனா விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும் தொடர்ந்து நிரந்தர அதிபராக அவர் நீடிக்கும் சூழல் உருவாகியது. இதனைத் தொடர்ந்து சீன நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் அந்த நாட்டு அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று ( செவ்வாய்க்கிழமை) ...

Read More »

ட்ரம்ப் பெயரால் வந்த சோதனை

ப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 வயது சையத் அசாதுல்லா போயா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தன்னுடைய மகனுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என்ற நம்பிக்கையில் ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று பெயர் வைத்தார். ஆனால் பெயர் வைத்த நாள் முதல் இன்றுவரை பெரும் சங்கடத்தைச் சந்தித்து வருகிறார். 2016-ம் ஆண்டு சையதின் மனைவி ஜமிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கோடீஸ்வரரான ட்ரம்ப் அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பாக இருந்தார். கொந்தளிப்பான இவரது அரசியல் வாழ்க்கையைப் பற்றி சையத் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு வெற்றி பெற்ற தொழிலதிபர் என்ற முகம் ...

Read More »

தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – 5 கோடி பேரின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் ஒப்புதல்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது. இதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி ...

Read More »

105 டன் யானை தந்தம், 1.35 டன் காண்டா மிருகங்களின் கொம்புகளை எரித்த அளித்த கென்யா

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றன. இப்படி, கொல்லப்படும் யானைகளின் தந்தம் ஆசிய நாட்டு கள்ளச்சந்தைகளில் ஒருகிலோ சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை விலைபோகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காண்டா மிருகங்களின் கொம்புகள் ஒருகிலோ சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது, இது, தங்கத்தைவிட கூடுதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது. பணத்துக்கு ஆசைப்பட்டு யானைகளையும், காண்டா மிருகங்களையும் கொன்று அவற்றின் தந்தங்கள் ...

Read More »

மனிதாபிமானமற்ற செயல்…

சிகாகோவிலிருந்து அட்லாண்டா செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 24 வயது ஆம்ஸ்ட்ராங் நடந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். “ஒரு தந்தை தன்னுடைய மகளுடன் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பும்போது குழந்தை மிகவும் பயந்துவிட்டது. தன் இருக்கையில் அமராமல் தந்தை மடியில் அமர வேண்டும் என்று அழுதது. தந்தையும் சமாதானம் செய்தார். சாப்பிடுவதற்கு பாப்கார்ன் கொடுத்தார். ஆனால் குழந்தை பயத்தில் அழுதுகொண்டே இருந்தது. அருகில் இருந்த சிலர் விமானப் ...

Read More »