தொழில் நுட்பம்

தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, கயித்தக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. எதற்காக மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என விசாரித்தால், பெரும்பாலானோர் பதில் கூறுவதில்லை. புதியவர்களை கண்டாலே விலகிச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பேச்சு கொடுத்தால், ‘தயங்கியபடி தங்கம் தேடுகிறோம்’ என்கின்றனர்.இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ‘நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இப்பணி யைச் செய்கின்றனர். இதற்காக புதி தாக குழிகள் ...

Read More »

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு 70%க்கும் மேல் கார்ப்பரேட்களே பொறுப்பு?

பொதுத்துறை வங்கிகளின் சீரழிவுக்கு பெரும்பங்கு காரணமாக இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று நிபுணர்கள் கூறிவந்தது தற்போது ஆர்பிஐ தரவு மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் மொத்தக் கடனில் 37% பங்கு தொழிற்துறைக்குத்தான் செல்கிறது. இப்படியிருக்கையில் கார்ப்பரேட் மற்றும் தொழிற்துறை கடன்களில் 73% வாராக்கடனாக உள்ளது. சில்லரைக் கடன்கள் வங்கிகள் அளிக்கும் கடன்களில் சுமார் 23% இருந்தாலும் அதில் வாராக்கடன் என்பது 3.71%தான் என்று ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்பிஐ தகவலை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கிறது. கார்ப்பரேட்கள் மூலம் வாராக்கடன் அதிகரிப்புக்குக் காரணம் ...

Read More »

மும்பையில் புதிய முறை அறிமுகம்-சாலையை கடக்க

மும்பையில் பரபரப்பான சாலைகளில் எளிதாக சாலையை கடக்கும் வகையில், மக்களே சிக்னலை மாற்றும் பட்டனை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. சாலையை கடப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியதாகும். அதிலும் பரபரப்பான காலை, மாலை நேரத்தில் விபத்துகளில் சிக்கிவிடாமல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதசாரிகளின் இந்த பதற்றத்தையும், காத்திருப்பையும் குறைக்கும் வகையில் நடந்து செல்லும் மக்களே சிக்னலை மாற்றி சாலையை கடக்கும் முறை சோதனை முயற்சியாக மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவி மும்பை மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சிக்னல்களில் பாதசாரிகள் ...

Read More »

கணிதம், இயற்பியல் துறையில் இந்தியர்கள் திறமைசாலிகள்:மனம் திறந்து பாராட்டுஸ்டீபன் ஹாக்கிங்

இந்தியர்கள் கணிதம், இயற்பியலில் திறமைசாலிகள்’’ என்று இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மனம் திறந்து பாராட்டி உள்ளார். இங்கிலாந்தின் இயற்பியல் மற்றும் விண்வெளி துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நேற்று தனது 76-வது வயதில் காலமானார். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங், 16 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, மும்பை, டெல்லியைச் சுற்றிப் பார்த்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினார். அப்போது, இந்தியர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் மிக திறமைசாலிகள் என்று அவரிடம் ...

Read More »