சினிமா

சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பணியாற்றுவது பெருமை: அமிதாப்

சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பணியாற்றுவது பெருமையளிக்கிறது என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடம் ஏற்று நடித்துவரும் அமிதாப் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ” ‘சையீரா! நரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவிகாருவுடன் பணியாற்றுவது பெருமையளிக்கிறது (மெகா ஸ்டாருடன் பணியாற்றுவது மரியாதைக்குரியது) என்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை சிரஞ்சீவியுடன் இணைத்து மேற்கோள் காட்டியுள்ளார். அமிதாப் பச்சன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். நரசிம்ம ரெட்டி திரைப்படத்தை ...

Read More »

விஜய் 62 படத்தில் மற்றும் ஒரு புதிய அறிமுகம்

   ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விஜய்-62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் ஹிந்தி ...

Read More »

பட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த படம் தேவ் டி. அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள் என்று ராதிகா தெரிவித்துள்ளார். இயக்குனர் கேட்டுக் கொண்டதால் ராதிகா முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளார். அதன் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டது இல்லையாம். பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார். ராதிகா ...

Read More »

பத்மாவத்’ வெற்றி: ரிலீஸான 4 நாட்களில் வட அமெரிக்காவில் மட்டும் 4.9 மில்லியன் டாலர் வசூல் சாதனை

வரலாற்றுத் திரைப்படமான ‘பத்மாவத்’ வடமெரிக்காவில் வெளியான 4 நாட்களில் 4.9 மில்லியன் டாலர் குவித்து வசூலில் புதிய சாரதனை படைத்துள்ளது. பத்மாவத் திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதுவம் 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி ஆகிய வடிவங்களில் 326 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வடமெரிக்காவில் மட்டும் வெளியான 4 நாட்களில் 4.9 மில்லியன் டாலர் குவித்துள்ளது. அவ்வகையில் வசூலில் புதிய சாதனையை பத்மாவத் பாலிவுட் திரைப்படம் படைத்துள்ளது. இதுகுறித்து பாலிவுட் குரு இணையதளம் தெரிவித்துள்ள விவரம் வருமாறு: சஞ்சய் லீலா பன்சாலியின் ...

Read More »

ஸ்ரீதேவியும் மலையாளத் திரையுலகமும்: ஒரு பார்வை

மலையாளத்தில் மற்ற மொழிகளை ஒப்பிடும்போது சில படங்களிலேயே நடித்துள்ள ஸ்ரீதேவி, அந்தப் படங்கள் தன் திரைவாழ்வை வடிவமைத்த தருணங்கள் என்று எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளார். பாலிவுட்டுக்குச் சென்று ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பெயர் பெறுவதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக கேரள மக்களின் இதயங்களை வென்றவர் ஸ்ரீதேவி. இந்த ஆரம்பகால திறமை தெற்றென விளங்க அந்தப் படிக்கட்டுகளில் பயணித்து பெரிய உச்சத்தை எட்டினார். 1969-ம் ஆண்டு இரண்டு மொழிகளில் தயாரான, பி.சுப்பிரமணியன் இயக்கிய, குமார சம்பவம் படத்தில் சுப்பிரமணியன் கதாபாத்திரத்தில் தோன்றினார் ஸ்ரீதேவி. எல்லாம் சிவமயம் ...

Read More »

‘காளியன்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஒப்பந்தம்

பிருத்விராஜ் நடிக்கவுள்ள ‘காளியன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘காளியன்’ என்ற வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்தார் பிருத்விராஜ். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குஞ்சிரக்கோட்டு காளி என்ற போர்வீரன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதில் காளியின் சேனாதிபதி ரவிக்குட்டி பிள்ளையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ். ‘பாகுபலி’யின் கட்டப்பா கதாபாத்திரம் போன்று, இதுவும் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் ‘காளியன்’ பட இயக்குநர் மகேஷ். ‘கண்ணாமூச்சி ஏனடா’ படத்துக்குப் பிறகு பிருத்விராஜ் – ...

Read More »

என் பின்னால் பாஜக இல்லை’ – ரஜினிகாந்த் பேட்டி

ஆன்மிகப் பயணமாக கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. ஆன்மிகப் பயணம் சென்று வந்தபிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. ரத யாத்திரை என்பது மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், அரசு ...

Read More »

இமயமலையில் குதிரைச் சவாரி!! அட யாருப்பா இது நம்ம ரஜினியா\

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, காவு கொள்ளப்பட்ட தமிழக உரிமைகளை வென்றெடுக்க வலிமை வாய்ந்த போர்க்குணம் மிக்க ஒரு போராளித் தலைவரை தமிழகம் தேடிக் கொண்டிருக்கிறது. போராடுகிற மக்களின் கண்களில் இந்த ஏக்கம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண வருவேன் என்று சொல்லாமல் ஒரு வெற்றிடம் இருக்கிறது. ‘அதை நான் நிரப்புவேன். முதல்வர் பதவியில் அமர்ந்து ...

Read More »

இந்த ஜோடி புதுசு! நடிகர் விக்ரம் மகனுக்கு கெளதமி மகள் சுப்புலட்சுமி ஜோடியாகிறார்!

டோலிவுட்டில் சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டியை, இயக்குநர் பாலா, ‘வர்மா’ என்ற பெயரில் பரபரப்பாக ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஏற்று நடித்த பாத்திரத்திற்கு விக்ரம் மகன் துருவை அறிமுகப்படுத்துகிறார் பாலா. இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் வர்மாவுக்கும் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘குக்கூ’, ஜோக்கர்’ படப்புகழ் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். அண்மையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நேபாளம் அருகே காட்மாண்டுவில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கன்யாகுமரியில் விரைவில் தொடங்கவிருக்கிறது இந்நிலையில் கதாநாயகித் ...

Read More »

102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார். அமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’ படத்தில் குள்ள மனி­த­ராக வந்தார். தற்­போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வரு­கிறார். இப்­ப­டத்தில் 102 வயது முதி­ய­வ­ராக அமிதாப்பச்சன் நடிக்­கிறார். அவரின் 75 வயது மக­னாக ரிஷி கபூர் நடிக்­கிறார். அமிதாப் பச்­சனும் 66 வய­தான ரிஷி கபூரும் 27 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இப்­ப­டத்தில் இணைந்து நடிக்­கி­றார்கள் தந்­தைக்கும், மக­னுக்கும் ...

Read More »