செய்திகள்

வாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை

தொட்டியில் வீட்டு தோட்டம் ,பைகளில் தோட்டம் ,பழைய குழாய்களில் தோட்டம் ,வைக்கோல் பேல்களில் தோட்டம் ,தேங்காய் நார் கழிவில் ,பிளாஸ்டிக் பாட்டிலில் மீள் சுழற்சி செய்த பொருட்களில் தோட்டம் இவற்றையெல்லாம் முயற்சித்த மக்கள் அடுத்து வாழை மரத்தின் தண்டு பகுதியிலும் தோட்டம் வளர்த்து இருக்கிறார்கள் . உகாண்டா நாட்டில் வாழை மரம் அதிக விளைச்சல் தரும் பயிர் . அந்நாட்டை சேர்ந்தவர்கள் அறுவடைக்கு பின் வெட்டி சாய்த்த தடித்த மரங்களில் குறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் .வாழை மரத்தண்டில் செடி ...

Read More »

இந்தியாவில் தினமும் 6.25 லட்சம் சிறுவர்கள் புகைப்பிடிக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்கு கீழ்) தினமும் சிகரெட் புகைப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் புகையிலை பயன்பாடு தொடர்பாக அமெரிக்க புற்றுநோய் மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சுமார் 9 கோடியே 3 லட்சம் ஆண்களும், 1 கோடியே 93 லட்சம் பெண்களும் தினமும் புகைப்பிடிக்கின்றனர். அதேபோல், 17 கோடியே 10 லட்சம் பேர் நாள்தோறும் சிகரெட் அல்லாத புகையிலையை பயன்படுத்துகின்றனர். சுமார் 6 லட்சத்து 25 ...

Read More »

காய்கறி தோட்டமாக மாறிய குப்பை கிடங்கு

குப்பை கிடங்கில் விளைந்த காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்று, வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்திவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் 5 டன் குப்பை சேகரிக்கப்பட்டு காலவாக்கம் பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். ஆனால், பணிகள் நடைபெறாததால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பை தேங்கி கிடந்தது. இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் ...

Read More »

ஆவடி அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு

ஆவடி அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 147 பேர் மீட்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் தனியார் செங்கற்சூளை ஒன்று உள்ளது. இந்த செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் செங்கற்சூளையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது, சத்தீஸ்கர் – ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 63 ...

Read More »

தமிழக பட்ஜெட் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல். தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு: வருவாய்த் துறை ரூ. 6,144 ...

Read More »

போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி

திருவொற்றியூரில் போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், ராசய்யா, ஜோதிபாசு. ரவுடிகளான 3 பேரும் மண்ணடி ரவுடி விஜயகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் அண்ணாமலை என்பரை கொலை செய்ய 3 பேரும் மீண்டும் திட்டம் தீட்டியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மரத்தில் தாவி தப்பிக்க முயற்சி அதைத் ...

Read More »

கூலிப்படையை ஏவி ராஜீவ் காந்தியை தீர்த்து கட்டினார்கள் – சுப்பிரமணியசாமி பகீர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  புதுடெல்லி: எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். காலங்கடந்த அவரது இந்த கருத்து அரசியல் ஆதாயத்துடன் வெளியிடப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, பிரபல ...

Read More »

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது கணவருடன் குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். காட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்துபாயில் பணிபுரியும் விவேக்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதிதான், திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது திருமணம் முடித்து துபாய் சென்ற அவர், விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு மார்ச் 1 ஆம் தேதி வந்துள்ளார். வாழ்வின் அனைத்து முக்கிய தருணங்கள் குறித்தும் சமூக ஊடகத்தில் எழுதி இருக்கும் ...

Read More »

மாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்

சென்னை : ”அஸ்வினியை நன்றாக படிக்க வைத்து, திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், என்னை காதலித்து ஏமாற்றியதால், எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து, கொலை செய்தேன்,” என்று, கல்லுாரி மாணவி, அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை, மதுரவாயலை அடுத்த, ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர், சங்கரி; வீட்டு வேலை செய்கிறார்.கணவர் மோகன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு, மகன், மகள் உள்ளனர். மகள், அஸ்வினி, 19; கே.கே.நகரில் உள்ள ...

Read More »

விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்பு-ஜப்பான்

65 சென்டிமீட்டர் விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்புநீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என அசஹி டிவி கூறுகிறது. காட்டுப்பன்றிகளிடம் இருந்து அரிசி மற்றும் செஸ்நட் பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது. விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். ...

Read More »