இந்தியா

10 ஆண்டுகளில் சியாச்சினில் 163 ராணுவ வீரர்கள் சாவு

கடந்த 10 ஆண்டுகளில் சியாச்சின் பகுதியில் 163 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்விநேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: உலகின் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள போர்க்களப் பகுதியான சியாச்சின் பனிச்சிகரப் பகுதியில் நமது ராணுவ முகாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பனிப்புயல், பனிப்பாறைச் சரிவு, கடுங்குளிர், அதிகவேகத்தில் குளிர் காற்று போன்றவை இங்கு சர்வசாதாரணமாக நடக்கும். ...

Read More »

டீசல் டோர் டெலிவரி: இந்தியன் ஆயில் அறிவிப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் டீசலை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வீட்டிற்கே வந்து டீசல் விற்கும் டோர் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் வீதிகளில் வலம் வரும். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் முதலில் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை, விரைவில் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த சேவை டீசலுக்கு மட்டும்தான். இதன் மூலம் பேருந்து, டிரக் உள்ளிட்ட கனரக வாகன ...

Read More »

போதி தர்மன் யார்? Bodhidharma

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். ...

Read More »

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரைச் சிக்கவைக்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்: ஒரு மணி நேரத்தில் சிக்கினார்

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரை சிக்கவைக்க விமான நிலையத்துக்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விட்ட படித்த அறிவாளிகள் ஒரு மணி நேரத்தில் சிக்கினர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னை சர்வதேச விமான நிலையத்தை சக்தி சரவணன் என்பவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக பதற்றமான குரலில் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையின் காவலர்கள், நீங்கள் யார் பேசுவது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ...

Read More »

திருமண நிகழ்ச்சியல் நடனம் ஆடிய பெண்ணை கொலை செய்த கணவர்

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுபீர் நஷ்கர். இவரது மனைவி சப்னா (18). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சுபீரும் சப்னாவும் சென்றுள்ளனர். திருமண விழாவில் சப்னா நடனமாடியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுபீர், சப்னாவை கண்டித்துள்ளார். அங்கேயே கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற பின்னரும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். சுபீரின் தாயும் சப்னாவை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ...

Read More »

பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிய ரக ராக்கெட் குண்டுகள் வீசிநடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதை மதித்து நடக்காமல் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. ஜம்முகாஷ்மீர் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நம்முடைய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுக்கின்றனர். சில நேரங்களில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாகிக் கொண்டு இருக்கிறது. ...

Read More »

மகாத்மா காந்திக்கும் ஹரிலால் காந்திஇக்கும் இடையே நடந்த ஒரு பசபோரட்ட கதை

ஹரிலால் காந்தி காந்தியால் இறுதிவரை சமாதானம் செய்ய இயலாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் முகமது அலி ஜின்னா. மற்றொருவர் ஹரிலால் காந்தி. மகாத்மாவின் நான்கு மகன்களில் மூத்தவர் ஹரிலால். காந்தி பேரொளி என்றால், ஹரிலால் பேரொளியின் உள்ளிருக்கும் நிழல். காந்தி மதுப் பழக்கத்தைக் கடுமையாக வெறுத்தவர். ஹரிலாலால் மது இன்றி வாழவே முடியாது. காந்தி கடன் வாங்குவதை வெறுத்தார். ஹரிலால் கடன் வாங்கியே வாழ்வைத் தொலைத்தார். காந்தி தன்னை ஓர் உண்மையான இந்துவாக உயர்த்திக் கொள்ள முயன்றார். ஹரிலால் காந்தியை வருத்த இஸ்லாமியரானார். (மீண்டும் ...

Read More »

மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்திய வுக்கு எதனையாவது இடம் தெரியுமா

இந்தியர்கள்தான் உலகிலேயே மிக மகிழ்ச்சியானவர்கள் என இனிமேலும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. சமீபத்தில் ஐ.நா. வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2012-ம் ஆண்டு முதல், ஐ.நா. அமைப்பு ஆண்டுதோறும் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஒருவரின் வாழ்நாள் கால அளவு, சமூகத்தின் ஆதரவு, ஊழலின் அளவு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவீடு ...

Read More »

தாகூரின் தமிழகப் பயணம் நூற்றாண்டு காலம் அகிவிட்டது

மகாகவி பாரதி இறப்பதற்குச் சில நாட்கள் முன் ‘ஸ்ரீரவீந்திர திக்விஜயம்’ என்னும் கட்டுரையைச் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் எழுதியிருந்தார். ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்ற தாகூர் அங்கெல் லாம் பெற்ற பெருவரவேற்பைக் கொண்டாடி எழுதிய எழுத்தோவியம் அது. கண்காணா நாடுகளுக்கு விஜயம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய தாகூரின் பயணங்களைப் பற்றி எழுதிய பாரதி, தன் கண்காண நடந்த பயணத்தைப் பற்றி ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை.நூற்றாண்டு காணும்  அந்தப் பயணம், பாரதி கைதாகி விடுதலை பெற்ற பிறகு முதன்முறையாகச் சென்னை வந்து தங்கியிருந்த 1919 ...

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை- பெருகிவரும்இணையவழிக் குற்றங்கள் பெரிய சவால்

சமூக வலைதளங்களும், இணையவழிக் குற்றங்களும் காவல்துறை, புலனாய்வுத் துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். காவல்துறை தலைவர்களின் ஆசிய – பசிபிக் பிராந்தியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கினை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தொழில்நுட்பங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பங்களை தவிர்த்துவிட்டு நம்மால் வாழ முடியாது என்ற சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. ...

Read More »