இந்தியா

இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு

இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் தேர்வாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வாகியுள்ளது. அதேபோல், சிறந்த கல்வி ...

Read More »

வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

குரங்கு தூக்கிச் சென்ற குழந்தை, பிறந்து 16 நாளே ஆன நிலையில் எங்கு தேடியும் கிடைக்காமல் மறுநாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. புவனேஸ்வர் மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் பங்கி அருகே தலப்ஸ்தா கிராமத்தில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: குரங்கு தூக்கிச் சென்ற 16 நாள் ஆன குழந்தையை, போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் வளைந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் காயம் இருந்ததாகவும், 24 மணிநேரம் கிணற்றில் ...

Read More »

சச்சின் இதிலும் மாஸ்டர்’தான்! பிரதமர் நிவாரண நிதிக்கு முழு சம்பளத்தையும் வழங்கி அசத்தல்!

நாடாளுமன்றத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம் ராஜு கண்ட்ரிகா கிராமத்தையும், மகாராஷ்டிராவில் டோன்ஜா கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்த வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஆந்திராவில் பல வளர்ச்சிப் பணிகளைபுதுதில்லி: மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது முழு சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மென் என புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே ...

Read More »

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 3 மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி

மத்தியபிரதேசத்திலுள்ள 3 மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தூர் நகரத்திலுள்ள சர்வாத்தே பஸ் நிலையம் அருகே 60 ஆண்டு பழமையான ஓட்டல் உள்ளது. 3 மாடி உடைய இந்த ஓட்டலின் கட்டிடத் தூண் மீது நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாக வந்து மோதியது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் பலியாயினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர் என்று சோட்டி குவாலிதோலி போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சு காம்ளே தெரிவித்தார். ...

Read More »

மும்பையில் சிக்னலுக்கு காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளை: துரத்தி ஓடியும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட ருசிகர சம்பவம்

சாலையில் சிக்னலுக்காக காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற இருவரை துரத்திச் சென்றும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட சம்பவம் மும்பையில் நேற்று நடந்துள்ளது. மும்பையின் போரிவாலி பகுதியில் காலை 11 மணி.. ஆர்.எம்.பட் சாலையில் காரில் வந்துகொண்டிருந்த மக்வானா, ரெட் சிக்னல் விழுந்தவுடன் காரை நிறுத்தினார். அப்போது கார் அருகே இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் கார் கண்ணாடியைத் தட்டினார். கண்ணாடியைத் திறந்தபோது இன்னொருவர் அவரை அழைப்பதுபோல திசை திருப்பினார். அவரிடம் ”என்ன” என்று கேட்பதற்குள் கண்ணாடியைத் தட்டியவர் காரிலிருந்த பணப் பையை ...

Read More »

தமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் போக்குவரத்து துறை ஒப்பந்தம்

தமிழகத்தில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த, இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தின் சி-40 என்ற முகமை, மின்சாரப் பேருந்துகளை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்கும் மின்சார பேருந்து திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில், ...

Read More »

இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த பெண் துணை விமானி மரணம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம் முருட் பகுதியில் கடந்த 10ந்தேதி இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த சீட்டாக் ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் இயந்திரம் நடுவானில் செயலிழந்த நிலையில் கடலில் விழுந்து விடாமல் இருக்க கரையை நோக்கி அதனை விமானி மற்றும் துணை விமானி செலுத்தினர். தரையில் மணலில் இறங்க மேற்கொண்ட முயற்சி பலனின்றி பெருங்கற்கள் நிறைந்த பகுதியில் மோதி நின்றது. அதன் துணை விமானி பென்னி சவுத்ரி ஹெலிகாப்டரில் இருந்து முதலில் இறங்கியுள்ளார். இதில், மெதுவாக சுழன்ற ஹெலிகாப்டரின் காற்றாடி அவரது ...

Read More »

பொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை மையத்திலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்புப் படை யின் மிக முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ். மிகவும் கனரக ஆயுதமான இது, முதல் முறையாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கேஐ ரக ஜெட் போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணை நேற்று மீண்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) மத்திய பாதுகாப்புத் ...

Read More »

சென்னையில் சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள்-செயின் பறிப்பவர்களுக்கு போதையூட்டும் மருந்து விற்பனை:

செயின் பறிப்பவர்கள் குரூரமாக, இரக்கமின்றி செயல்பட போதைப் பழக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒருவகை மருந்தை விற்பனை செய்ததாக சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் சிக்கினர். சென்னையில் சமீப காலமாக போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் பெரிய தலைவலியாக இருப்பது செயின் மற்றும் செல்போன் பறிப்பாளர்களே. அதிலும் செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இப்படி செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் இரக்கமற்றவர்களாக இருக்கின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும்போது பெண்கள் கீழே விழுந்தாலும் செயினைப் பறிப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருப்பர். சமீபத்தில் ...

Read More »

போலி விற்பனை கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் கடன்: கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது ரூ.824 கோடி மோசடி புகார்- வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை

போலி கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது சிபிஐயில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, கனிஷ்க் நிறுவனம், உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்தியது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) சென்னை மண்டல பொது மேலாளர் ஜி.டி.சந்திரசேகர், டெல்லி சிபிஐ இணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்ப தாவது: சென்னை தி.நகரில் ‘கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்’ (கேஜிபிஎல்) என்ற தனியார் தங்க நகை தயாரிப்பு ...

Read More »