வணிகம்

நாடு, வௌ்ளைப் பச்சை அரிசியை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலும்

நாடு மற்றும் வௌ்ளைப் பச்சை அரிசி வகைகளை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலுமென அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார். இதனையடுத்து, எந்தவொரு அரிசி வகைக்கும் தட்டுப்பாடு நிலவாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த 80 ரூபா தீர்வை, கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் அரசாங்கத்தினால் […]

The post நாடு, வௌ்ளைப் பச்சை அரிசியை எதிர்காலத்தில் 76 ரூபாவுக்கு விற்பனை செய்ய இயலும் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

பெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் – மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு

போதியளவு மழையின்மையால் பெப்ரவரி மாத இறுதி வரையே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால், நாட்டின் நாளாந்த மின் தேவையின் 85 வீதத்தை அனல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 38 வீதத்தை விட வீழ்ச்சியடைந்துள்ளமையால், நீர் மின் உற்பத்தி 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அரைவாசியாகக் குறைவடைந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், மின் துண்டிப்பின்றி […]

The post பெப்ரவரி மாதம் வரையே நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் – மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

ஜனாதிபதியின் முயற்சியால் மீண்டும் கிடைத்த GSP+ வரிச்சலுகை

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தமது வர்த்தக சந்தையில் தெரிவு மற்றும் கட்டுப்பாட்டுடன் வாய்ப்புகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளினால் GSP+ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் பாதுகாப்பற்ற மற்றும் சிறிய நாடுகளின் 7200 உற்பத்திப் பொருட்களுக்கு தமது வர்த்தக சந்தையில் தீர்வை வரி இன்றி பிரவேசிப்பதற்கு அவர்கள் சந்தர்ப்பம் வழங்குகின்றனர். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கும் அந்த சலுகை கிடைத்தது. மூன்று வருடங்கள் அந்த வாய்ப்பினை இலங்கை பெற்றிருந்ததுடன் […]

The post ஜனாதிபதியின் முயற்சியால் மீண்டும் கிடைத்த GSP+ வரிச்சலுகை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

மூன்று இலட்சம் டொலர் சேமிப்புடன் இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு விசா வழங்கப்படும்

மூன்று இலட்சம் டொலர் சேமிப்பு அல்லது செலாவணியுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்ததாவது, கடன்களைப் பெறாமல், வட்டி செலுத்தாத செலாவணியைப் பெற்றுக்கொள்வதே தமது நோக்கம் என குறிப்பிட்ட நிதி அமைச்சர், இதன் மூலம் கடந்த முறையும் சுமார் 7 மில்லியனைப் […]

The post மூன்று இலட்சம் டொலர் சேமிப்புடன் இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு விசா வழங்கப்படும் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

உள்நாட்டு அரிசி விலை குறைவடைந்துள்ளது

உள்நாட்டு அரிசி ஒரு கிலோகிராமின் விலை 8 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது. அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து உள்நாட்டு அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஹேமக பெர்ணான்டோ கூறினார். அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் பிரகாரம், அரிசி இறக்குமதி தீர்வை வரியான 15 ரூபாவை மாத்திரம் அறவிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இதன் […]

The post உள்நாட்டு அரிசி விலை குறைவடைந்துள்ளது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

இலங்கைக்கான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையின் உற்பத்திகளுக்கான தீர்வை வரியைக் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி விடயம் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான 17 விடயங்களில் இலங்கை திறம்பட செயற்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்கும் GSP+ வரி சலுகையூடாகவே […]

The post இலங்கைக்கான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

இன்று நள்ளிரவுடன் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 44 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில், ஜனவரி மாதம் முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலையை 5 ரூபாவால் குறைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

The post இன்று நள்ளிரவுடன் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம்

குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலையுடன் வொக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லையென ஏற்கனவே தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ், பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹொரணை டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. முதலீட்டு சபையின் கீழ், இலங்கையிலுள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்காக இத்தாலியின் மரங்கொனி என்ற நிறுவனம் இலங்கை நாணயப் பெறுமதியில் 11 பில்லியன் டொலர்களை மறைமுகமாகவே முதலீடு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

The post ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »

இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரி 80 ரூபாவிலிருந்து 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார். தீர்வை வரி, தேச நிர்மாண வரி உள்ளிட்ட மேலும் பல வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் அரிசி மீதான வரி 80 ரூபா வரை அதிகரித்திருந்தது. புதிய தீர்மானத்திற்கு அமைய, இறக்குமதி செய்யடும் அரிசி மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, விசேட 15 ரூபா […]

The post இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி குறைப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

Read More »