Blog Page

இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு

இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் தேர்வாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வாகியுள்ளது. அதேபோல், சிறந்த கல்வி ...

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ...

Read More »

ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் பைராபுராவில் இருந்து 62 அடி உயரம் உள்ள‌ பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை,பெங்களூருவுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த சிலை 30 எடை தூக்கும் இயந்திரங்களின் உதவியுடன் 300 சக்கர லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று பெங்களூரு நோக்கி கொண்டுவரப்பட்டது. இதனால் நேற்று காலையில் ஓல்ட் மெட்ராஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீராம சைதன்யா அறக்கட்டளையின் செயலர் மஞ்சு கூறும்போது, “பெங்களூருவில் உள்ள காச்சரக்கனஹள்ளி ராமர் ...

Read More »

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 40 பேர், வெப்பமயமாதலில் இருந்து புவியைக் காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏப்ரல் முதல் நாளன்று ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி மற்றவர்களை முட்டாளாக்கி பார்ப்பது வழக்கம். அவர்களுக்கு மத்தியில், அலங்காநல்லூர் இளைஞர்கள் சற்று வித்தியாசமாக இந்த தினத்தில் மற்றவர்களை முட்டாளாக்குவதை தவிர்த்து புவியை வெப்பமயமாதலில் இருந்து காக்கும் கருத்தை முன்நிறுத்தி, மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’ தினத்தை ...

Read More »

டிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தன் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் உடைந்து நொறுங்கிப்போயுள்ள ஆஸ்திரேலியாவை மேலும் களத்தில் வாட்டி எடுத்து விட்டது தென் ஆப்பிரிக்கா, டுபிளெசிஸ் 178 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 120 ரன்களையும் ஆஸ்திரேலியாவை வதைக்கும் டீன் எல்கர் 250 பந்துகளில் 10 ...

Read More »

பணக்காரர்களும் பயந்தாங்கொள்ளிகளும்-ஓநாயும் அட்டுகுட்டயும்

மும்பையும் தூதரக உறவு இல்லாத தனித்தனி ராஜ்யங்கள் போன்றவை. டெல்லி இந்திய அரசியலையும் மும்பை இந்திய பொருளாதாரம், நிதி உலகத்தையும் பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் நிரந்தர ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்த கடந்த 1989-ம் ஆண்டு முதல் பார்த்தால், டெல்லி 8 பிரதமர்களைப் பார்த்துவிட்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மும்பைக்கு கவலையில்லை. அதற்கு எல்லா தந்திரமும் வழிமுறைகளும் தெரியும். ஆட்சி மாறும் வரை காத்திருக்கும் பொறுமையும் அதற்கு உண்டு. அதனால் ஆட்சி விவகாரத்திலோ அல்லது ஆட்சி மாற்றத்திலோ மும்பை அதிகம் தலையிடுவது இல்லை. ...

Read More »

உலக மசாலா: கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத பெதானி

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது பெதானி ஹா மில்டன், அலைச் சறுக்கு வீரராக இருக்கிறார். 14 வயதில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, மிகப் பெரிய சுறாவின் தாக்குதலில் இடது கையை இழந்தார். 60% ரத்தத்தை இழந்துவிட்டதால் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் நினைத்தனர். சற்றும் மனம் தளராமல், கதறி அழாமல், வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். உயிர் பிழைத்தார். இனிமேல் அவரது வாழ்க்கையில் அலைச் சறுக்கு விளையாட்டு இல்லை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர். நினைவு தெரிந்த நாளில் இருந்து அலைச் சறுக்கு விளையாட ...

Read More »

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா ...

Read More »

தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, கயித்தக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. எதற்காக மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என விசாரித்தால், பெரும்பாலானோர் பதில் கூறுவதில்லை. புதியவர்களை கண்டாலே விலகிச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பேச்சு கொடுத்தால், ‘தயங்கியபடி தங்கம் தேடுகிறோம்’ என்கின்றனர்.இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ‘நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இப்பணி யைச் செய்கின்றனர். இதற்காக புதி தாக குழிகள் ...

Read More »

திருமணத்திற்கு பின் தாயிற்கு மகள் எழுதிய கடிதம் – ஆண்கள் கண்டிப்பாக பார்க்கவும்.!!

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று… நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள். ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. ...

Read More »