Author Archives: raja

ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவு: இமாலய வெற்றி பெறுகிறார் புதின்

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அதிபர் புதின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராவது மீண்டும் உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்/ ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் ...

Read More »

இந்தியாவில் தினமும் 6.25 லட்சம் சிறுவர்கள் புகைப்பிடிக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்கு கீழ்) தினமும் சிகரெட் புகைப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் புகையிலை பயன்பாடு தொடர்பாக அமெரிக்க புற்றுநோய் மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சுமார் 9 கோடியே 3 லட்சம் ஆண்களும், 1 கோடியே 93 லட்சம் பெண்களும் தினமும் புகைப்பிடிக்கின்றனர். அதேபோல், 17 கோடியே 10 லட்சம் பேர் நாள்தோறும் சிகரெட் அல்லாத புகையிலையை பயன்படுத்துகின்றனர். சுமார் 6 லட்சத்து 25 ...

Read More »

பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிய ரக ராக்கெட் குண்டுகள் வீசிநடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதை மதித்து நடக்காமல் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. ஜம்முகாஷ்மீர் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நம்முடைய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுக்கின்றனர். சில நேரங்களில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாகிக் கொண்டு இருக்கிறது. ...

Read More »

புகழ் மழையில் தினேஷ் கார்த்திக்

இத்தகைய மந்தமான பிட்சில் ரூபல் ஹுசைன் போன்ற ஆக்ரோஷமான திறமையான வீச்சாளரை 6 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது சாதாரண விஷயமல்ல. எதிர்முனையில் இருந்த இன்னொரு தமிழ்நாட்டு வீரரான விஜய் சங்கர் மட்டையிலிருந்து காற்று வந்து கொண்டிருந்த நிலையில் அவரையும் தன் இன்னிங்ஸினால் காப்பாற்றினார் தினேஷ் கார்த்திக்.இந்நிலையில் ட்விட்டரில் அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்தனர். சச்சின் டெண்டுல்கர்: அபாரமான வெற்றி! தினேஷ் கார்த்திக் சூப்பர்ப் பேட்டிங், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் கிரேட் இன்னிங்ஸ்! இறுதிப் போட்டியில் ...

Read More »

காய்கறி தோட்டமாக மாறிய குப்பை கிடங்கு

குப்பை கிடங்கில் விளைந்த காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்று, வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்திவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் 5 டன் குப்பை சேகரிக்கப்பட்டு காலவாக்கம் பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். ஆனால், பணிகள் நடைபெறாததால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பை தேங்கி கிடந்தது. இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் ...

Read More »

உணர்ச்சிகளை தூண்டுபவையா உள்ளாடைகள்

லாவண்யா இளம்பெண்… சென்னையில் வசிப்பவர். என்னிடம் ஓர் ஆலோசனை வேண்டி வந்தார். அவருடைய கணவர் ஒரு ‘லாஞ்சரி’ (Lingerie) பிரியர். லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. அதை வாங்கி வந்து லாவண்யாவை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை. ‘லாஞ்சரியில் என்னைப் பார்த்தால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது. பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்குப் பிடிக்கவில்லை. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து, கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். ...

Read More »

மும்பையில் புதிய முறை அறிமுகம்-சாலையை கடக்க

மும்பையில் பரபரப்பான சாலைகளில் எளிதாக சாலையை கடக்கும் வகையில், மக்களே சிக்னலை மாற்றும் பட்டனை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. சாலையை கடப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியதாகும். அதிலும் பரபரப்பான காலை, மாலை நேரத்தில் விபத்துகளில் சிக்கிவிடாமல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதசாரிகளின் இந்த பதற்றத்தையும், காத்திருப்பையும் குறைக்கும் வகையில் நடந்து செல்லும் மக்களே சிக்னலை மாற்றி சாலையை கடக்கும் முறை சோதனை முயற்சியாக மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவி மும்பை மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சிக்னல்களில் பாதசாரிகள் ...

Read More »

கேது பகவான் பற்றிய ரகசியங்கள்

கேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும். பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான். உகந்த கிழமை – சனிக்கிழமை உகந்த நட்சத்திரம் – அசுவதி, மகம், மூலம் நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி பிடித்த மலர் – செவ்வரளி ...

Read More »

பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எச்சரிக்கை!! ஹிட்லரை போல் ஈரான் தலைவர் அயத்துல்லாவால் ஆபத்து: சவுதியும் அணு ஆயுதம் தயாரிக்கும்-

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்தால் நாங்களும் அதை பின்பற்றுவோம் என்று சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் (32) எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வரும் திங்கள்கிழமை அமெரிக்கா வரவுள்ளார். முன்னதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இதில் இளவரசர் சல்மான் கூறியதாவது: சவுதி அரேபியா அணு ஆயுதம் தயாரிக்க விரும்பவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் ...

Read More »

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன? நீங்கள் இப்படி தான் ஜோதிடம்

நாம் ஒவ்­வொ­ரு­வரும் தமிழில் நம் பெயரை எழு­து­வதைப் போல ஆங்­கி­லத்­திலும் எழு­து­வ­துண்டு. அதன் படி ஆங்­கி­லத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன்­படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரம்­பித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். A ஆங்­கி­லத்தின் முதல் எழுத்­தான “A” என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் எதிலும் அதிகம் ஈடு­பாடு உள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் உடல் அம்சம் மற்­ற­வர்­களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இவர்கள் எதிலும் உறு­தி­யோடு ...

Read More »