40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து கர்நாடகாவில் சாதனை படைத்த சித்தராமையா

Image result for sitaramayya karnatakaகர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்திருக்கிறார்.
கர்நாடகாவில் 1972-ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதல்வராக பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி, உட்கட்சி மோதல்களை கடந்து வெற்றிகரமாக 5 ஆண்டு ஆட்சியை 1977-ல் நிறைவு செய்தார். 1978-ல் நடந்த தேர்தலிலும் வென்ற தேவராஜ் அர்ஸ் 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். அதன்பின் பொறுப்பேற்ற குண்டுராவ் 1980-ம் ஆண்டு முதல் 1983 வரை முதல்வராக இருந்தார்.கடந்த 1983-ம் ஆண்டு தேர்தலில் ஜனதா கட்சி வென்று ராமகிருஷ்ண ஹெக்டே

முதல்வரானார். க‌ர்நாடகாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வரான‌ ஹெக்டே, 1984-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, கே.ஹெச்.பாட்டீல், எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என அடுத்தடுத்து பொறுப்பேற்ற முதல்வர்களும் வெவ்வேறு காரணங்களால் 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்யவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு மே மாதம் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்.Image result for sitaramayya karnataka