242 மில்லியன் டாலர்களை சுருட்டிய “பிளேபாய்”

பணம் இரட்டிப்பு என ஏமாற்றி 24.20 கோடி சுருட்டியும் நீதிக்கு தண்ணீர் காட்டும் "பிளேபாய்"அந்த வங்கியின் மேலாளர் கடன் வழங்க ஒப்புக் கொண்டார். ஃபுடங்கா பாபானி ஸிஸோகோ இரவு விருந்து வருமாறு அவரை அழைத்தார்.

இதுதான் எக்காலத்திலும் மிகவும் தைரியமான ஏமாற்று வேலையின் தொடக்கமாக அமைந்தது என்று பிபிசியின் பிரிஜிட் ஷெஃபர் எழுதுகிறார்.

உற்சாகமான மர்மம்

இந்த இரவு விருந்தில், பாபானி ஸிஸோகோ உற்சாகமான மர்மத்தை விளக்கி கூறினார்.

தனக்கு மாந்திரீக சக்தி இருப்பதாக அந்த வங்கியின் மேலாளர் முகமது அயூப்பிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த சக்தியை கொண்டு ஒரு குறிப்பிட்ட பணத்தொகை கொடுத்தால் தன்னால் இரட்டிப்பாக்க முடியும் என்று பாபானி ஸிஸோகோ தெரிவித்திருக்கிறார்.

இந்த ஐக்கிய அரேபிய எமிரேட்டை சேர்ந்த நண்பரை கொஞ்சம் பணத்தொகையோடு மீண்டும் வருவதற்கு பாபானி ஸிஸோகோ அழைத்துள்ளார்.

“பிளாக் மேஜிக்”

இஸ்லாம் மதம் “பிளாக் மேஜிக்”யை தெய்வ நிந்தனை என்று கண்டிக்கிறது.

என்றாலும், இன்னும் இது பற்றிய நம்பிக்கை பரந்த அளவில் நிலவி வருகிறது.

மாலியின் தொலைதூரத்தில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த வண்ணமயமான மற்றும் மர்மமான தொழிலதிபரால் அயூப் மிகவும் கவரப்பட்டார்.

அடுத்த முறை அயூப், பாபானி ஸிஸோகோயின் வீட்டுக்கு கொஞ்சம் பணத்தோடு வந்தபோது, ஒரு அறையில் இருந்து விரைவாக வெளிவந்த மனிதர் ஒருவர் “டியின்” என்கிற ஆவி அவரை தாக்கியதாக தெரிவித்தார்.

“அவருடைய பணம் இரட்டிப்பாகாது என்ற அச்சம் அடைவதால், டியின்” ஆவியை அயூப் கோபப்படுத்த கூடாது என்று அவர் தெரிவித்தார்.

எனவே, அயூப் தான் கொண்டு வந்திருந்த பணத்தை அந்த மேஜிக் அறையில் வைத்துவிட்டு காத்திருந்தார்.

அவர் விளக்குகளையும், புகையையும் பார்த்ததாக அவர் கூறினார். ஆவிகளின் குலைகளை அவர் கேட்டார். பின்னர் அங்கு அமைதி நிலவியது.

கொள்ளை ஆரம்பம்

அந்த பணம் உண்மையிலேயே இரட்டிப்பாகி இருந்தது. அயூப் மிகவும் உற்சாகமடைந்தார். கொள்ளை ஆரம்பமாகியது.

“பாபானி ஸிஸோகோவால் பணத்தை இரட்டிப்பாக முடியும் இது பிளக் மேஜிக்-கால் நடந்தது என அயூப் நம்பினார்” என்று இந்த குற்றத்தை பின்னர் புலனாய்வு செய்ய வங்கியால் நியமிக்கப்பட்ட மியாமி அட்டர்னி ஆலன் ஃபையின் தெரிவித்தார்.

“வங்கியின் பணத்தை பாபானி ஸிஸோகோவிடம் அயூப் அனுப்பி வைப்பார். அந்த தொகை இரண்டு மடங்காக வங்கிக்கு திரும்ப வரும் என்று அவர் எதிர்பார்த்தார்” என்று அவர் விவரித்தார்

1995 முதல் 1998ஆம் ஆண்டுகளுக்கு இடையில், உலகின் பல பகதிகளில் உள்ள பாபானி ஸிஸோகோவின் வங்கி கணக்குகளுக்கு 183 பண பரிமாற்றங்களை அயூப் செய்துள்ளார்.

பாபானி ஸிஸோகோ அதிக அளவிலான கடன் அட்டை (கிரடிட் கார்டு) பண பரிமாறத்தையும் நடத்தி வந்தார்.

பாபானி ஸிஸோகோவுக்கு பதிலாக இந்தப் பரிமாற்றங்களை எல்லாம் அயூப்பே செலுத்தி வந்துள்ளார்.

அடக்கி வாசித்த துபாய் அதிகாரிகள்

1998ஆம் ஆண்டு இந்த குறிப்பிட்ட வங்கி பிரச்சனையில் இருப்பதாக வதந்தி பரவியபோது, ஆலன் ஃபையின் அங்கிருந்தார்.

இந்த வங்கி பண பரிமாற்றங்களில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியானதை அடுத்து மக்கள் தங்களுடைய பணத்தை எடுக்க இந்த வங்கியின் முன் திரண்டனர்.

இந்த பிரச்சனையை பெரிதுபடுததாத துபாய் அதிகாரிகள், இது சிறிய பிரச்சனை என்றும், இதனால் “வங்கியின் முதலீடுகளிலோ அல்லது வங்கியில் நிதி வைத்திருப்பவர்களின் கணக்குகளிலோ நிதி இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் கூறிவிட்டனர். ஆனால், அது உண்மையில்லை.

இந்த வங்கியின் உரிமையாளர்கள் மிக பெரிய பாதிப்பு அடைந்தனர். இதற்கு காப்பீடுகள் எதுவும் இருக்கவில்லை என்று ஆலன் ஃபையின் தெரிவிக்கிறார்.

“அரசு உதவுவதற்கு முன்வந்ததால், அந்த வங்கி தப்பித்தது. ஆனால், இதற்காக அவர் வங்கியின் பங்குகள் பலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

சரி! “பிளாக் மேஜிக்” நடத்திய பாபானி ஸிஸோகோ எங்கே? அவர் எட்டாத தொலைவிற்கு சென்றுவிட்டார்

இந்த ஏமாற்று வேலையின் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால், இந்த பணத்தை பெறுவதற்காக, பாபானி ஸிஸோகோ துபாயில்தான் இருக்க வேண்டும் என்றில்லை என்பதுதான்.

அமெரிக்காவில் திருமணம் செய்து வங்கியில் கைவரிசை

1995ஆம் ஆண்டு முகமது அயூப்புக்கு பணம் இரட்டிப்பாகுவதை விளக்கிக்காட்டிய அடுத்த ஒரு சில வாரங்களில் பாபானி ஸிஸோகோ, நியூயார்க்கிலுள்ள இன்னொரு வங்கியை அணுகினார். அங்கு ஒரு வங்கி கணக்கு தொடங்குவதைவிட அதிகமாகவே அவர் செய்தார்.

“ஒரு நாள் சிட்டிபாங்கிற்கு சென்ற அவர், யாரையும் சந்திக்க முன் அனுமதி பெற்றிருக்கவில்லை. பணம் வழங்குநர் ஒருவரை அங்கு சந்தித்தார். அந்த சந்திப்பு திருமணத்தில் முடிந்தது” என்கிறார் ஆலன் ஃபையின்.

அவருடைய மனைவிக்கு சிட்டிபாங்குடன் நல்ல தொடர்பை வைத்திருந்ததால், அங்கு பாபானி ஸிஸோகோ தொடங்கிய வங்கிக் கணக்கிற்கு 10 கோடி டாலருக்கு மேலாக இணையதள பண பரிமாற்றம் மூலம் சென்றுள்ளது” என்று ஆலன் ஃபையின் தெரிவிக்கிறார்.

சிட்டிபாங்கிற்கு எதிராக துபாய் இஸ்லாமிய வங்கி தொடர்ந்த வழக்கில், உரிய அதிகாரமின்றி துபாய் இஸ்லாமிய வங்கி தொடர்பாளர் கணக்கில் இருந்து 15 கோடியே 10 லட்சம் டாலருக்கு மேலான தொகையை சிட்டிபாங்க் எடுத்துள்ளது” என்று அவர் தெரிவித்திருக்கிறார். பின்னர் இந்த வழக்கு கைவிடப்பட்டது.

புதிதாக திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு பாபானி ஸிஸோகோ 50 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை உதவியாக அளித்தார்.

“எந்த சட்டப்படி பாபானி ஸிஸோகோ அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியாது என்றும், அவரை தன்னுடைய மனைவி என்று பாபானி ஸிஸோகோ அழைத்தார் என்றும் ஃபையின் கூறுகிறார்.

“அவருக்கு பல மனைவிகள் இருப்பதும், அவர்களில் சிலர் ஆஃப்ரிக்காவிலும், சிலர் மியாமியிலும், சிலர் நியூயார்க்கிலும் இருந்தனர் என்று இந்த புதிய மனைவிக்கு தெரியும்” என்று ஃபையின் குறிப்பிடுகிறார்.

“ஏர் தபியா” தோற்றம்

வங்கியின் பணம் வந்து சேரவே, மேற்கு ஆஃப்ரிக்காவுக்கு பயணியர் விமான நிறுவனத்தை தொடங்கும் தன்னுடைய கனவை பாபானி ஸிஸோகோ நிறைவேற்றினார்.

அவர் ஹாக்கர்-சிட்லி 125 மற்றும் ஒரு ஜோடி பழைய போயிங் 727-களை வாங்கிய பாபானி ஸிஸோகோ, மாலியில் உள்ள தனது சொந்த கிராமமான “ஏர் தபியா” என்ற பெயரில் விமான நிறுவனத்தை நிறுவினார்.,

ஆனால், 1996ஆம் ஆண்டு, வியட்நாம் போர் காலததை சேர்ந்த இரண்டு ஹியூ ஹெலிகாப்டர்களை வாங்க முயற்சித்து பாபானி ஸிஸோகோ மாபெரும் தவறை செய்தார். என்ன காரணத்திற்காக இந்த முயற்சியை மேற்கொண்டார் என்பது தெரியாது.

அவசர கால வான்வழி ஆம்புலன்சாக அவற்றை பயன்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார். ஆனால், இந்த ஹெலிகாப்டர்கள் மிகவும் பெரியவை. மருத்தவமனைகளுக்கும், சிகிச்சை மையங்களுக்கும் செல்வதற்காக வழக்கமாக அமெரிக்காவில் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை விட மிகவும் பெரியவை” என்று ஃபையின் தெரிவிக்கிறார்.

அதில் ஆயுதங்களை மீண்டும் பொருத்த முடியும் என்பதால், சிறப்பு ஏற்றுமதி உரிமம் பெறவேண்டியிருந்தது.

இதற்கான வழிமுறைகளை மிகவும் விரைவாக செய்து முடிக்க பாபானி ஸிஸோகோ ஆட்கள் சுங்கத்துறை அதிகாரிகளுகுகு 30 ஆயிரம் டாலர் கையூட்டு வழங்கினர்.

காரியம் கைக்கூடுவதற்கு பதிலாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாபானி ஸிஸோகோவை கைது செய்யவும் இன்டர்போல் பிடியாணை வழங்கியது.

மாட்டிக்கொண்ட ஸிஸோகோ

நீதிமன்றம்

இன்னொரு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஜெனிவா சென்றிருந்த பாபானி ஸிஸோகோ, அங்கேயே கைது செய்யப்பட்டார்.

பாபானி ஸிஸோகோவின் சார்பாக ஆஜரான மியாமி வழக்கறிஞர் டாம் ஸ்பென்சர், ஜெனிவாவிலுள்ள சாம்ப்-டோலோன் சிறையில் சந்திக்கப் போனதை தெளிவாக நினைவுகூர்கிறார்.

“பாபானி ஸிஸோகோ அமெரிக்காவுக்கு செல்வாரா, மாட்டாரா என்று கேட்ட சிறைக் காவலரிடம் நான் பேசினேன்” என்று ஸ்பென்சர் கூறுகிறார்.

“அவ்வாறு செல்வதாக இருந்தால், முடிந்த அளவு தாமதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். காரணம் கேட்டதற்கு, பாரிஸில் இருந்து தினமும் சிறந்த உணவுகளை வரவழைத்து தருகிறார் என்றார் சிறைக் காவலர். இதுதான் பாபா பாபானி ஸிஸோகோ பற்றிய முதல் அனுபவம்” என்கிறார் ஸ்பென்சர்.

மிகவும் விரைவாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட பாபானி ஸிஸோகோ, அங்கும் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களை திரட்டினார்.

ஸிஸோகோவுக்கு ஆதரவாக தூதாண்மை அதிகாரிகளே தயாராக இருந்தது பாபானி ஸிஸோகோவுக்கு பிணை வழங்குகின்ற வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஸிஸோகோவை பாதுகாக்கும் அணியினரோடு தானும் இணைந்து கொள்வதாக அமெரிக்க செனட் அவை உறுப்பினர் பிர்ச் பாய தெரிவித்தபோது டாம் ஸ்பென்சர் அதிர்ச்சியடைந்தார்.

அமெரிக்காவுக்கு மதிப்புடைதாக தோன்றாத வெளிநாட்டு பிரஜை ஒருவரின் விடயத்தில் யார் ஈடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பும் ஃபையின், இதற்கான விடை தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால், இந்த கேள்வியை எழுப்புவது நல்லது என்றும் கூறுகிறார்.

ஸிஸோகோவை காவலில் வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பியது. ஆனால், 2 கோடி அமெரிக்க டாலர் செலுத்தி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டது, ஃபுளோரிடா மாகாணத்தில் அப்போதைய வரலாற்று பதிவாக அமைந்தது.

வாரி வழங்கும் வள்ளல்

அதன்பிறகு, மிகப் பெரிய அளவில் செலவுகளை செய்தார் ஸிஸோகோ.

அவரை பாதுகாத்த அணியினருக்கு மெர்சிடஸ் அல்லது ஜாக்குவார் கார்களை பரிசாக வழங்கினார். இதுவொரு ஆரம்பம் மட்டுமே.

5 லட்சம் டாலரை ஒரு நகைக்கடையில் மட்டுமே ஸிஸோகோ செலவிட்டார். பிற கடைகளில் பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவழித்தார். ஆண்களுக்கான ஆடை கடை ஒன்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு மேலாக ஸிஸோகோ செலவு செய்தார்” என்று ஃபையின் நினைவுக்கூர்கிறார்.

வரி வழங்கும் வள்ளலாய்

“ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று, நான்கு என கணக்கில்லாமல் கார் வாங்கும் அவர், இன்னொரு வாரம் வந்து மீண்டும் அதேபோல் கணக்கில்லாமல் கார் வாங்குவார் . காற்று தடையின்றி புழங்குவது போல் அவரிடம் பணப்புழக்கம் இருந்தது ” என்று கார் தரகர்பு ரேனில் டூஃபிரெனெ குறிப்பிடுகிறார்.

ஸிஸோகோவிடம் மொத்தம் 30 முதல் 35 கார்கள் வரை விற்றதாக அவர் பட்டியலிடுகிறார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை

மியாமியின் பிரபலமாக ஸிஸோகோ மாறினார். அவருக்கு பல மனைவிகள் இருந்தாலும், மேலும் பல தாரங்களை மணப்பதில் அவருக்கு சலிப்பே ஏற்படவில்லை. நகரத்தில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த 23 குடியிருப்புகளில் அவர்களை ஸிஸோகோ தங்க வைத்திருந்தார்.

“தீராத விளையாட்டு பிள்ளை என்பது அவரை பற்றி விளக்கும் சொற்களாகும். அவர் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தார். அதிக பணத்தை மியாமியில் அவர் வாரி இறைத்தார்” என்று கூறுகிறார். ஸிஸோகோவின உறவினர் மகான் மௌஸா.

நல்ல காரியங்களுக்காகவும் பெரிய தொகைகளை ஸிஸோகோ உதவியாக வழங்கினார். அவருடைய விசாரணை நெருங்கி வருகிறது. இந்த பிரபலத்தின் மதிப்பு அவருக்கு தெரியும்.

ஒரு முறை நியூ யார்க்கில் நடைபெறுகின்ற நன்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு உயர்நிலை பள்ளி ஒன்றின் பேட் அணியினருக்கு தேவைப்பட்ட 3 லட்சம் டாலர் தொகையை ஸிஸோகோ வழங்கியதை அவருடைய உறவினரே பார்த்திருக்கிறார்.

வியாழக்கிழமைகளில் வீடில்லாதோரக்கு பண வழங்க அவர் செல்வதுண்டு என்று அவரது இன்னொரு வழக்கறிஞர் பேராசிரியர் ஹெச்.டி.ஸ்மித் நினைவுகூர்கிறார்.

“இவர் ஒரு நவீன கால ராபின் ஹுட்? என்று நான் எண்ணினேன். பணத்தை திருடி அவர் ஏன் வழங்க வேண்டும். இதில எதுவும் பிடிபடவில்லையே” என்று அவர் குறிப்பிடுகிறார்.

12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்

“அவர் சென்றவுடன் மியாமி ஹெரால்ட் பத்திரிகை அவரை பற்றிய செய்தியை வெளியிட்டது. நான் மிகைப்படுத்தி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால், அவர் ஒரு கோடியே 40 லட்சம் டாலர் பிறருக்கு வழங்கியுள்ளதாக இந்த பத்திரிகை வெளியிட்டிருந்தது. 10 மாதங்கள்தான் அவர் இங்கிருந்தார். அப்படியானால், மாத்த்திற்கு பத்து லட்சம் லாடருக்கு அதிகமாக அவர் பிறருக்க வழங்கியுள்ளார்” என்று ஸ்மித் தெரிவித்தார்.

ஆலன் ஃபைன் சற்று இழிவான பார்வையைக் கொண்டுள்ளார்.

“அவர் செய்த இவை எல்லாம் தன்னை பற்றி பிறர் வைத்திருக்கும் பிம்பத்தை மேம்படுத்தவும், அவர் ஒரு சக்தி வாய்ந்த, மிகவும் செல்வந்தர் என்ற நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதற்காவும்தான். அவர் பணத்தை வழங்கியிருக்கலாம். ஆனால், என்னுடைய நம்பிக்கையின்படி, அதற்கான பிரபலத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை” என்று ஃபையின் நம்புகிறார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஸிஸோகோ மீதாக வழக்கு விசாரணைக்கு வந்துபோது, தன்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையையும் மீறி, தன்னுடைய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு செய்வதன் மூலம் அவருடைய நிதி நிலைமை பற்றிய மிக குறைவான கேள்விகளே எழும்பலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

43 நாட்கள் சிறை தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபாராத தொகையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை எங்கிருந்து வழங்கப்பட்டது என்று எண்ணுகிறீர்களா? முற்றும் முழுவதும் தெரியாத அளவில் துபாய் இஸ்லாமிய வங்கியிடம் இருந்துதான் இந்த தொகையும் சென்றது.

சிறை தண்டனையில் பாதியை அனுபவித்த நிலையில், வீடிழந்தோருக்கு 10 லட்சம் டாலர் வழங்க இருப்பதால், அதற்கு பிரதிபலனாக தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாகவே ஸிஸோகோ விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில்

எஞ்சியிருந்த சிறை தண்டனையை மாலியில் வீட்டுச் சிறையில் அவர் கழிக்க வேண்டும் என்றிருந்தது.

ஆனால், தாயகம் வந்த அவருக்கு கதாநாயகனுக்குரிய பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது

இந்த நேரத்தில்தான் துபாய் இஸ்லாமிய வங்கியின் கணக்கு தணிக்கையாளர்கள் ஏதோ தவறாக நடந்து கொண்டிருப்பதை உணர தொடங்கினர்.

ஸிஸோகோ தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால், அயூப் பதற்றம் அடைய தொடங்கினார்.

எவ்வளவு பணம் காணவில்லை என்று கேட்ட தன்னுடைய சகா ஒருவரிடம் அயூப் கடைசியில் அனைத்தையும் கூறிவிட்டார்.89 லட்சம் திராம்ஸ் ஒரு சாதாரண காகிதத்தில் அயூப் எழுதி வைத்திருந்த்தை சொல்ல வெட்கப்பட்டார். 89 லட்சம் திராம்ஸ் என்பது 24 கோடியே 20 லட்சம் டாலருக்கு சமமான தொகையாகும்

அவர் மீது பண மோசடி குற்றஞ்சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. “பிளாக் மேஜிக்” பற்றிய அவருடைய நம்பிக்கையை அகற்றுவதற்கான தீய ஆவியை ஓட்டுவதற்கும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக வதந்தி நிலவியது.

ஸிஸோகோ எவ்வித தண்டனையும் அனுபவிக்கவில்லை. அவர் ஆஜராகாத நிலையில், பண மோசடி மற்றும் மாந்தரீகத்தை செயல்படுத்தியதாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்ததால், அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார்.

பாரிஸ் உள்பட ஸிஸோகோ ஆஜராகாமல் இருந்த விசாரணைகளின் ஆவணங்களை ஃபையின் கண்டறிந்தார்.

அயூப்பின் செயல்பாடுகளுக்கு ஸிஸோகோ பலிகாடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், வங்கியின் பணம் வேறெங்கோ சென்றுள்ளது என்றும் அவருடைய வழங்கறிஞர் வாதிட்டிருக்கிறார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றமோ பண மோசடியில் ஸிஸோகோவுக்கு தண்டனை வழங்கியுள்ளது.

2002 முதல் 2014ஆம் ஆண்கள் வரை 12 ஆண்டுகள் ஸிஸோகோ மாலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பது, தண்டனை விலக்கு பெறுவதற்கு உதவியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத இவர், மாலி பிற நாடுகளோடு ஒப்படைப்பு ஒப்பந்தம் எதையும் செய்யாமல் இருப்பதால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

துபாய் இஸ்லாமிய வங்கி இன்னமும் நீதிமன்றங்கள் மூலம் அவரை தொடர்கிறது.

.

.

.

.