Monthly Archives: March 2018

தேமல் – அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே! மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம். தோலில் சொறி, சிரங்கு, புண் ...

Read More »

பித்த வெடிப்பு – மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம். பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக… * பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு ...

Read More »

ஒரு சிக்ஸருக்கு 14 ஆண்டுகள்!

தமிழ் சினிமாவில் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர் நடிகர் விக்ரம். அண்மைக் காலத்தில் கிரிக்கெட்டில் அப்படி ஒருவரைக் கைகாட்ட வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக்தான் அதற்குச் சரியானவர். 2004-ம் ஆண்டில் தொடங்கி அணியில் போவதும் வருவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட்டில் தனக்கெனத் தனிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற 14 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டது. டோனிக்கு மாற்றுநயன் மோங்கியா விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த வேளையில் 2000-களின் தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் ...

Read More »

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு 70%க்கும் மேல் கார்ப்பரேட்களே பொறுப்பு?

பொதுத்துறை வங்கிகளின் சீரழிவுக்கு பெரும்பங்கு காரணமாக இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று நிபுணர்கள் கூறிவந்தது தற்போது ஆர்பிஐ தரவு மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் மொத்தக் கடனில் 37% பங்கு தொழிற்துறைக்குத்தான் செல்கிறது. இப்படியிருக்கையில் கார்ப்பரேட் மற்றும் தொழிற்துறை கடன்களில் 73% வாராக்கடனாக உள்ளது. சில்லரைக் கடன்கள் வங்கிகள் அளிக்கும் கடன்களில் சுமார் 23% இருந்தாலும் அதில் வாராக்கடன் என்பது 3.71%தான் என்று ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்பிஐ தகவலை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கிறது. கார்ப்பரேட்கள் மூலம் வாராக்கடன் அதிகரிப்புக்குக் காரணம் ...

Read More »

சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பணியாற்றுவது பெருமை: அமிதாப்

சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பணியாற்றுவது பெருமையளிக்கிறது என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடம் ஏற்று நடித்துவரும் அமிதாப் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ” ‘சையீரா! நரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவிகாருவுடன் பணியாற்றுவது பெருமையளிக்கிறது (மெகா ஸ்டாருடன் பணியாற்றுவது மரியாதைக்குரியது) என்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை சிரஞ்சீவியுடன் இணைத்து மேற்கோள் காட்டியுள்ளார். அமிதாப் பச்சன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். நரசிம்ம ரெட்டி திரைப்படத்தை ...

Read More »

இனி ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்க முடியாது என்பது என் இதயத்தை நொறுக்குகிறது: கனத்த இதயத்துடன் வார்னர் பேட்டி

பால் டேம்பரிங் விவகாரத்தில் சூத்திரதாரியாகச் செயல்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து தடை விதிக்கப்பட்ட முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், தன்னுடன் வீரர்கள் இனி களம் காண மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாகவும் இனி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடவே முடியாது என்றும் கனத்த இதயத்துடனும் கண்ணீரை அடக்கியபடியும் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, சக வீரர்கள், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, தன் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பல கேள்விகளுக்கு வார்னர் பதிலளிக்கவில்லை, ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு ...

Read More »

அரசமைப்பு சாசனம் திருத்தப்படும்: மியான்மர் புதிய அதிபர் உறுதி

மியான்மரின் அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் என்று அந்த நாட்டின் புதிய அதிபர் வின் மையிண்ட் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டின் விடுதலைப் போராட்ட தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. அவர் வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் அதிபர் பதவியேற்றார். உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் தேதி புதிய அதிபராக வின் மையிண்ட் ...

Read More »

மும்பையில் சிக்னலுக்கு காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளை: துரத்தி ஓடியும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட ருசிகர சம்பவம்

சாலையில் சிக்னலுக்காக காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற இருவரை துரத்திச் சென்றும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட சம்பவம் மும்பையில் நேற்று நடந்துள்ளது. மும்பையின் போரிவாலி பகுதியில் காலை 11 மணி.. ஆர்.எம்.பட் சாலையில் காரில் வந்துகொண்டிருந்த மக்வானா, ரெட் சிக்னல் விழுந்தவுடன் காரை நிறுத்தினார். அப்போது கார் அருகே இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் கார் கண்ணாடியைத் தட்டினார். கண்ணாடியைத் திறந்தபோது இன்னொருவர் அவரை அழைப்பதுபோல திசை திருப்பினார். அவரிடம் ”என்ன” என்று கேட்பதற்குள் கண்ணாடியைத் தட்டியவர் காரிலிருந்த பணப் பையை ...

Read More »

லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரைக் காப்பாற்றாமல் வீடியோ, புகைப்படம் எடுத்த மக்கள்

கம்மம் மாவட்டத்தின் வாரங்கல் சந்திப்பில் லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அசிஸ்டண்டெ சப் இன்ஸ்பெக்டரைக் காப்பாற்றாமல் மக்கள் தங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகுநாத்பலேம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் டி.பாஸ்கர், சாலையைக் கடந்த போது லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். லாரியின் இடது சக்கரம் அவரது வயிற்றில் ஏறிய பிறகும் அவர் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார், அப்போது சாலையில் குழுமிய மக்கள் கூட்டம் அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல் மொபைல் போன்களில் படம் எடுத்தது பலருக்கும் ...

Read More »

ஒடிசா மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து பழங்குடியினப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளம் டாக்டர்: குவியும் பாராட்டுகள்

ஒடிசா மாநிலத்தில், கந்தமால் மலைப்பகுதியில் 7 கி.மீ. நடந்து சென்று, பழங்குடியினப் பெண்ணுக்கு இளம் டாக்டர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கந்தமால் மாவட்டத்தில் தும்மிடிபண்டா சுகாதார மையத்தில் டாக்டராக வேலை செய்து வருபவர் யக்னதத்தா ராத். இந்த சுகாதார மையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதியில் பாலம் என்ற மலை கிராமம் உள்ளது. இங்குள்ள சீதாதாடு ரெய்தா (வயது 23)என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் ...

Read More »