சாதனை படைத்த சாம்சுங்

இலத்திரனியல் உலகைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் Consumer Electronics Show (CES) நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாகும்.

இந்நிகழ்வின்போது பல இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களும் கலந்துகொண்டு அந்த ஆண்டு விற்பனைக்கு தயாராகவுள்ள பொருட்களை அறிமுகம் செய்தல் அல்லது புதிதாக வடிவமைக்க காத்திருக்கும் சாதனங்கள் தொடர்பிலான தகவல்களை தெரிவிக்கும்.

இது தவிர தலைசிறந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகின்றது.

இவ்வருடத்திற்கான CES நிகழ்வானது அமெரிக்காவின் Las Vegas நகரில் இடம்பெற்றுவருகின்றது.

இதில் சாம்சுங் சார்பாக 3,880 இற்கும் அதிகமான காட்சிப்படுத்துபவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இதன்போது சாம்சுங் நிறுவனத்திற்கு 120 இற்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுள் QLED TV, Chromebook Plus, Pro Plus உட்பட மேலும் பல சாதனங்களுக்கான விருதுகளும் அடங்கும்.

இதேவேளை CES ஆனது 50வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

About kumbakonam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*