விரைவில் தொடங்குமா மூன்றாம் உலகப்போர் – வெளியான அதிர்ச்சி தகவல்

மூன்றாம் உலகப்போர் மிக விரைவில் துவங்கும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகளில் குடியிருக்கும் பெரும்பாலான மக்கள், புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்பில், உலகம் அசாத்தியமான ஒரு சூழலில் உள்ளதாகவும், உலகப்போருக்கு நாடுகள் தயாராகி வருவதாகவும் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிரியா விவகாரத்தில் வல்லரசு நாடுகள் எதிரெதில் நிலை கொண்டிருப்பதும், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தொடரும் தீவிரவாத தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டொனால்டு டிரம்ப் ஆகியோரது சமீபத்திய கருத்துகள் அந்த கருத்துக்கணிப்பு பட்டியலிட்டுள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பில் அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் உலக யுத்தம் மிக அருகாமையில் உள்ளது என்பது குறித்து பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று பிரன்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய மக்களும் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.அமெரிக்கர்களில் 64 சதவிகிதத்தினர் உலக அளவில் நடந்தேறும் விவகாரங்களை குறிப்பிட்டு உலகப்போர் மூளும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனால் வெறும் 15 விழுக்காடு மக்கள் மட்டும் உலக அமைதி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். பிரித்தானியர்களை பொறுத்தமட்டில் 61 விழுக்காட்டினர் மூன்றாம் உலகப்போர் மிக அருகாமையில் இருப்பதாகவும், 19 சதவிகிதத்தினர் அமைதி உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த இரு நாடுகளுக்கும் நேரெதிரான கருத்துகளை சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே மக்கள் பதிவு செய்துள்ளனர். இங்குள்ள 39 விழுக்காடு மக்கள் உலகம் மூன்றாம் உலக யுத்தத்தை அண்மையில் சந்திக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் 45 சதவிகிதம் பேர் யுத்தம் குறித்த பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கர்களும் பிரான்ஸ் மக்களும் யுத்தம் குறித்த பயத்தை வெளிப்படுத்தியுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட YouGov அமைப்பின் முதன்மை அதிகாரி ஆந்தனி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்பின் செயல்பாடுகள் குறித்த அச்ச உணர்வே அமெரிக்க மக்களுக்கு போர் குறித்த அச்ச உணர்வுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.தொடர் தீவிரவாத தாக்குதல் காரணமாக இருக்கலாம் பிரான்ஸ் மக்கள் அச்சப்படுவதற்கு முதன்மை காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த கருத்துக்கணிப்பில் மிக முக்கியமாக 71 சதவிகித பிரித்தானிய மக்கள் ரஷ்யாவிடம் இருந்தே அச்சுறுத்தல் வரும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

About kumbakonam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*