20 ஆண்டுகள் மனைவியிடம் பேசாத கணவன்! இப்படியும் ஒரு காரணமா?

ஒரு தம்பதிக்கு குழந்தைகள் பிறந்த பின் தன்னிடம் அக்கறை காட்டாவில்லை, தன்னை கவனிக்கவில்லை என கூறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் மனைவியிடம் பேசாமல் இருந்த சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஒடோவுக்கும், கடயம யுமிக்கும் திருமணமாகி 3 பிள்ளைகள் 25,21,18 வயதில் உள்ளனர்.

இந்த நிலையில் திடீரென ஒடோவ் அவரது மனைவியிடம் பேச மறுத்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் பேசாமல் இருந்துள்ளார்.

ஏன் பேசவில்லை என்ற காரணம் அவரது மனைவிக்கோ, அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு தெரியாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது 3வது பிள்ளையான 18 வயதான யோகிசி டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு கடிதம் எழுதியுள்ளார். “அதில் எனது தந்தை என் தாயிடம் பேசுவதே கிடையாது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக பேசாமல் உள்ளனர்.

என் தாய் மட்டும் என் தந்தையிடம் பேசுவார். ஆனால் என் தந்தை என் தாயிடம் ஒரு வார்த்தை கூட பேசி, பிள்ளைகளான நாங்கள் பார்த்ததில்லை.

25 வயதான எனது சகோதரி கூட தனக்கு நினைவு தெரிந்து தனது தந்தை பேசவிலலை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருவரையும் பேச வைக்க வேண்டும். அதற்கு ஏதேனும் செய்யுங்கள்.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இருவரையும் அழைத்து பேசிய டி.வி நிறுவனம். அவர்கள் தனியாக சந்தித்து பேச ஏற்பாடு செய்தது. அப்போது மிகவும் தயங்கியநிலையில், ஒடோவ் தனது மனைவியிடம் பேசினார்.

இதை மறைந்திருந்து பார்த்த அவர்களது பிள்ளைகள் ஆனந்த கண்ணீருடன் பார்த்தனர்.

ஏன் பேசவில்லை என்ற காரணத்தை ஒடோவ் கூறியுள்ளார். அதில், “எங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு அவர்களை கவனிக்க எனது மனைவி அதிக நேரம் ஒதுக்கினார்.

என்னை கவனிக்கவோ, எனக்காக நேரம் ஒதுக்கவோ மறந்துவிட்டார். அவருக்கு தண்டனை கொடுக்கும் வகையில் நான் பேசாமலிருந்தேன். இருப்பினும் அது தவறு என தற்போது உணர்ந்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

About kumbakonam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*