இன்றைய ராசி பலன் (2016.04.24)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங் களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங் கள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்

கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரை குறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத் தில் இழந்ததை மீட்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

தனுசு

எதிர்காலம் பற்றிய பயம், வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனு சரணையான பேச்சால் சரி செய்யுங்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

உங்களின் அணு குமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உறவினர்கள், வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. சாதிக்கும் நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

About kumbakonam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*