102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்

Amidhab  102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன் Amidhabநடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார்.

அமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’ படத்தில் குள்ள மனி­த­ராக வந்தார். தற்­போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வரு­கிறார்.

இப்­ப­டத்தில் 102 வயது முதி­ய­வ­ராக அமிதாப்பச்சன் நடிக்­கிறார். அவரின் 75 வயது மக­னாக ரிஷி கபூர் நடிக்­கிறார். அமிதாப் பச்­சனும் 66 வய­தான ரிஷி கபூரும் 27 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இப்­ப­டத்தில் இணைந்து நடிக்­கி­றார்கள்

தந்­தைக்கும், மக­னுக்கும் உள்ள பாசப் போராட்­டத்தை மைய­மாக வைத்து நகைச்­சுவை கதை­யம்­சத்தில் இந்தப் படம் தயா­ரா­கி­றது. இதன் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கி­றது. மே மாதம் வெளி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இந்­தி­யாவின் தேசிய விருது வென்ற மேக்அப் மற்றும் சிகை­ய­லங்­கார கலை­ஞ­ரான பிரீத்­திஷீல் சிங் அமிதாப் பச்­சனை வயது முதி­ய­வ­ராக மாற்­றி­யள்­ளனர். ரிஷி கபூ­ருக்கும் அவர் மேக்அப் செய்­துள்ளார்.

இது குறித்து ப்ரீத்­திஷீல் சிங் கூறு­கையில், “நான் குழந்­தை­யாக இருந்­த­போதே அமி­தாப்பும் ரிஷி கபூரும் திரை யில் மின்னும் நட்­சத்­தி­ரங்­க­ளாக விளங்­கி­ய­வர்கள். அவர்கள் இன்னும் இத­யங்­களை ஆள்­கின்­றனர்.

அவர்­கள் தமது மிகுந்த திற­மைகள், நட்­சத்­திர அந்­தஸ்து ஆகி­ய­வற்­றுக்கு மத்தியிலும் மேக் அப் செய்து கொள் வதற்காக மிக நீண்ட நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.amitabh-bachchan  102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன் amitabh bachchan

.