1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

1000 ஆண்­டுகள் பழை­மை­யான புத்தர் சிலை­யொன்றை ‘சீரி’ ஊடு­காட்டும் உப­க­ரண பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய விஞ்­ஞா­னிகள், அந்த சிலைக்குள் துற­வி­யொ­ரு­வரின் மம்­மி­யா­கிய எச்­சங்கள் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

நெதர்­லாந்தில் மியன்டர் மருத்­துவ நிலை­யத்­தி­லுள்ள டிரென்ட்ஸ் அருங்­காட்­சி­ய­கத்தில் மேற்­படி புத்தர் சிலை ‘சீரி’ ஊடு­காட்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

11 ஆம் அல்­லது 12 ஆம் நூற்­றாண்டு காலத்தைச் சேர்ந்த மேற்­படி சிலை சீன தியான பாட­சா­லை­யொன்றின் உரி­மை­யா­ள­ரான பெளத்த துறவி லியு­கு­வா­னுக்கு உரி­மை­யா­னது என பெளத்த நிபு­ண­ரான எறிக் புறுஜின் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அந்த துற­வியின் அனைத்து உறுப்­பு­களும் வெட்டி அகற்­றப்­பட்­டுள்­ள­மையும் மேற்­படி ஊடு­காட்டும் பரி­சோ­த­னையில் அறி­யப்­பட்­டுள்­ளது.  துற­வியின் மம்­மியைக் கொண்­டுள்ள புத்தர் சிலையின் அருகே சீன மொழியில் எழு­தப்­பட்ட துண்­டுக்­கு­றிப்பும் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.

ஊடு­காட்டும் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து துற­வியின் மம்மி எச்­சங்­களை கொண்ட புத்தர் சிலை எதிர்­வரும் மே மாதம் வரை ஹங்­கே­ரி­யி­லுள்ள தேசிய வர­லாற்று அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிப்படுத்தப்படவுள்ளது.

பெளத்த மக்களில் அநேகர் பெளத்த துறவியான லியுகுவான் உண்மையில் இறக்கவில்லை எனவும் அவர் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாகவும் நம்புகின்ற னர்.