10 ஆண்டுகளில் சியாச்சினில் 163 ராணுவ வீரர்கள் சாவு

Image result for சியாச்சினில் ராணுவ வீரர்கள்கடந்த 10 ஆண்டுகளில் சியாச்சின் பகுதியில் 163 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்விநேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:

உலகின் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள போர்க்களப் பகுதியான சியாச்சின் பனிச்சிகரப் பகுதியில் நமது ராணுவ முகாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பனிப்புயல், பனிப்பாறைச் சரிவு, கடுங்குளிர், அதிகவேகத்தில் குளிர் காற்று போன்றவை இங்கு சர்வசாதாரணமாக நடக்கும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இங்கு 163 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இதில் 6 பேர் ராணுவ அதிகாரிகள் நிலையில் இருந்தவர்கள்.Image result for சியாச்சினில் ராணுவ வீரர்கள்

2008-ல் 9, 2009-ல் 13, 2010-ல் 50, 2011-ல் 24, 2012-ல் 12, 2013-ல் 11, 2014-ல் 8, 2015-ல் 11, 2016-ல் 20, 2017-ல் 5 பேர் அங்கு இறந்தனர்என்றார்.

மற்றொரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறும்போது, “நமது நாட்டின் கடற்படைக்காக நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் 33 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன”Image result for சியாச்சினில் ராணுவ வீரர்கள்