வைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்!

லைகா தயாரிப்புசென்னை : ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரத்தில் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையில் நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதுஇம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்தார் ஷங்கர். இந்தப் படத்திலும் வடிவேலுவை ஹீரோவாக்கினார் ஷங்கர். முதல் பாகத்தை இயக்கிய சிம்பு தேவனே இந்தப் படத்தையும் இயக்குவதாக இருந்தது.இந்தப் படத்தில் இம்சை அரசனாக நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தைதயாரிப்பாளர் சங்கத்தில் புகார் இயக்குநர் ஷங்கர், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், இம்சை அரசனாகவே உருவெடுத்தார் வடிவேலுஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே கதையை திருத்தச் சொல்லி அந்த வசனம் பேசமாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார் வடிவேலு. இதற்கு இடையில் படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திவிட்டார் வடிவேலு.இதனால், 6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் வீணாகிப் போனது. வடிவேலுவால் சிக்கல்இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் தரப்பின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. வாங்கிய அட்வான்ஸ் தொகை, செட் போட்ட மதிப்பு ரூ.6 கோடி, அதற்கு வட்டி என மொத்தம் ரூ. 8 கோடியை கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் கூறிவிட்டதுதற்போது இறங்கி வந்திருக்கும் வடிவேலு, தயாரிப்பாளர் ஷங்கர் கூறுவதையும், இயக்குனர் சிம்புதேவன் கூறுவதையும் கேட்டு அப்படியே நடித்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். எனவே, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதுநடிக்க சம்மதம்.