வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரைச் சிக்கவைக்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்: ஒரு மணி நேரத்தில் சிக்கினார்

Image result for சென்னை மெரினா கடற்கரைவேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரை சிக்கவைக்க விமான நிலையத்துக்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விட்ட படித்த அறிவாளிகள் ஒரு மணி நேரத்தில் சிக்கினர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னை சர்வதேச விமான நிலையத்தை சக்தி சரவணன் என்பவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக பதற்றமான குரலில் கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையின் காவலர்கள், நீங்கள் யார் பேசுவது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு பதற்றத்தில் தீபு ஆனந்த் என தனது உண்மையான பெயரை கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இந்தத் தகவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை கூடுதல் கமிஷனர் (தெற்கு) சாரங்கன் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மற்றும் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களைத் தீவிரமாகத் தேடினர். கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபரின் செல்போன் எண் மற்றும் அதன் டவர் எங்கே காட்டுகிறது என்று போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

மறுபுறம் தகவல் உண்மையா என பொதுமக்கள் அச்சப்படாவண்ணம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை கண்டு போலீஸார் நிம்மதி அடைந்தனர்.Image result for சென்னை  vimana nilayam

பின்னர் செல்போனை டிராக் செய்ததில் வெகு எளிதாக மிரட்டல் விடுத்தவர்கள் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீஸிடம் சிக்கியவர் திருச்சி, துறையூர், கொப்பம்பட்டியைச் சேர்ந்த தீபு ஆனந்த்(29) என தெரியவந்தது. இவரது நண்பர் சென்னை, ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்த சக்தி சரவணன்(28). இருவரும் சோளிங்கநல்லூரில் உள்ள பிரபலமான தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

சக்தி சரவணனை சிக்கலில் மாட்டிவிட தீபு ஆனந்த் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

தீபு ஆனந்த்துக்கு சென்னை விமான நிலையத்தில் தெரிந்தவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகச் சக்தி சரவணன் கூறியுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். சக்தி சரவணனை எதிர்க்க துணிவில்லாத தீபு ஆனந்த் தனக்கு தெரிந்த மட்டமான இந்த யோசனையை செயல்படுத்தினார். இதற்காகத்தான் தீபு ஆனந்த் தன்னுடைய செல்போனில் போலீஸ் கட்டப்பாட்டு அறையின் அவசர நம்பரில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவரது செல்போன் நம்பர், கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியிருந்ததால் போலீஸாரிடம் எளிதில் சிக்கிக்கொண்டார்.Image result for சென்னை  vimana nilayam

இந்தியாவின் டாப் டென் பல்கலைக்கழகத்தில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பல்கலைக்கழகத்தில் தீபு ஆனந்த் படித்தவர். அதுபோல சக்தி சரவணனும் எம்.எஸ், ஐ.டி படித்துள்ளார். இவர்கள் இருவரும் போலீஸாரிடம் சிக்காமலிருக்க தங்களின் தொழில்நுட்ப அறிவை(?) இருவரும் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் போலீஸார் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி இருவரையும் பிடித்தனர். சொந்த செல்போன் எண்ணை வைத்து கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்வதும், சொந்த பெயரையே தெரிவிப்பதும், போலீஸாரிடம் நண்பரை மாட்டிவிட வெடிகுண்டு வைப்பதாக அவர் பெயரைச் சொன்னால் சிக்கிக் கொள்வார் என்று 8-ம் வகுப்பு மாணவனிம் மனநிலையுடன் வாழும் இவர்கள் எப்படி இவ்வளவு பெரிய படிப்பு படித்தார்கள் என்று தெரியவில்லை, எல்லாம் மக்கப் செய்து பாஸானார்களா? தெரியவில்லை என்று ஒரு காவல் அதிகாரி தலையிலடித்துக் கொண்டார்Image result for சென்னை  vimana nilayam