வெறிப்பிடித்த எம்எல்ஏ மகன் மீது வழக்கு

 காங்கிரஸ்,முகமது நலபாட், எம்எல்ஏ ஹரிஸ், காங்கிரஸ் எம்எல்ஏ, எம்எல்ஏ மகன் தாக்குதல், பெங்களூரு, காங்கிரஸ் எம்எல்ஏ ஹரி, எம்எல்ஏ மகன் முகமது நலபாட்,  வித்வாத் , Congress, Mohammed Nalapad, MLA Hari, Congress MLA, MLA son attack, Bangalore, Congress MLA Haris, MLA son Mohammad Nalband, Vidwadh,கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ். இவரது மகன் முகமது நலபாட். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பெங்களூருவில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றார். இரவு 11 மணியளவில் அங்கு, தங்கள் அருகில் அமர்ந்து. உணவருந்தி கொண்டிருந்த வித்வாத் என்பவரை இருக்கையில் சரியாக இருக்கையில் அமருமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் தனது காலில் காயம் உள்ளதால், அவ்வாறு அமர முடியாது எனக்கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், வித்வாத்தை முகமதுவும் அவரது நண்பர்களும் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் வந்த முகமதுவும் அவரது நண்பர்களும் வித்வாத்தை தாக்கியதுடன், அவரது சகோதரரையும் தாக்கினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய எம்எல்ஏ மகன் முகமது நலபாட் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் முகமது காங்கிரசிலிருந்து 6 வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.