வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

Image result for kuranguகுரங்கு தூக்கிச் சென்ற குழந்தை, பிறந்து 16 நாளே ஆன நிலையில் எங்கு தேடியும் கிடைக்காமல் மறுநாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

புவனேஸ்வர் மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் பங்கி அருகே தலப்ஸ்தா கிராமத்தில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:

குரங்கு தூக்கிச் சென்ற 16 நாள் ஆன குழந்தையை, போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் வளைந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் காயம் இருந்ததாகவும், 24 மணிநேரம் கிணற்றில் இருந்துள்ளது எனினும் உடலில் வீக்கம் எதுவுமில்லை என நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து காவல்தரப்பில்,Image result for குரங்கு images

விசாரணையின் பின்னர், பேங்கி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பியுள்ளோம். குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்பதை அறிந்துகொள்ள அறுவைசிகிச்சை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இக்குழந்தை குறைமாத பிரசவத்தில் அறுவைசிகிச்சை செய்து பிறந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,

தவிர இக்குழந்தையின் உயிரிழப்பு இயற்கையானதல்ல என்பதையும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை உயரதிகாரி பிரியாப்ரத் ரூத் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிறந்த குழந்தை குரங்கின் பிடியில் இருந்து விழுந்து விட்டது, கிணற்றில் விழுந்த பின்னர் குழந்தை இறந்து விட்டது, ஆனால், விசாரணையில் முன்னேற்றம் கிடைத்துள்ள வகையில், பல சாத்தியக் கூறுகளையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

வீட்டுக்குள் வந்த குரங்கு குழந்தையை தூக்கிச் செல்லும்போது, தாயின் அருகில்தான் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குரங்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றபோது இதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியது. இச்சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.Image result for குரங்கு images

இதில் குழந்தைத் தேடுவதில் பொறுப்புணர்வு இல்லாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் கிராமவாசிகள், மற்றும் நோய்வாய்ப்பட்ட தந்தை உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையில் இழப்பீடு கோரியும் தமபாடாச் சரக வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Image result for குரங்கு images