வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளையடித்த வ.தேச ஆயுதக் கும்பலை பாலத்தின் கீழே மறைந்திருந்தது பிடித்த தானே போலீஸார்

Image result for கொள்ளை கும்பல்மஹாராஷ்டிரா மாநிலத்தில், வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்கும் கும்பலை, ரகசிய புலனாய்வு செய்து பாலத்தின் கீழே மறைந்திருந்து பிடித்த சம்பவம் இன்று தானே அருகே நடைபெற்றது.

இந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் தானே அருகே காஷ்மீரா வட்டாரத்தின் பயாந்தெரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து வீட்டிலிருப்பவர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணமும் நகையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோன்று பல இடங்களிலும் கதவுகளை உடைத்து நகை பணங்களை இவர்கள் திருடுவதாக பல தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ள விவரம்:Image result for கொள்ளை கும்பல்

கடந்த மார்ச் 22 அன்று காலை நேரம், ஆயுதம் ஏந்திய கொள்ளைக்கும்பல் சென்னா கிரீக் அருகே ஒரு வீட்டின் கிரில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து வீட்டில் இருந்தவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு ரூ.9.98 லட்சம் மதிப்புள்ள பணம் மறறும் நகைகளை அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவியிருந்த அவர்கள் விவரம் தெரிவக்கப்பட்டு கைது செய்ய போலீஸாரிடம் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் வரும் பாதைகள் ரகசியமாக கண்டறியப்பட்டன. சிறப்புக் காவல் படையை தலைமையேற்று நடத்திய குற்றப்பிரிவின் முதுநிலை ஆய்வாளர் வெங்கட் அன்டலே மற்றும் உதவி ஆய்வாளர் ப்ரமோத் படக் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் இதில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கொள்ளையர் ஐவரும் அவ்வழியேImage result for கொள்ளை கும்பல்

வந்த செவ்ரோரெட் காரில் வரும் செய்தியறிந்து வாசாய்க்கும் வெர்சோவாக்கும் இடையில் உள்ள ஒரு பாலத்தில் விழிப்புடன் காத்திருந்தனர். அவர்கள் காரைபோலீஸ் படையினர் வழி மறித்தனர். காரில் இருந்தவர்கள் மார்ச் 22 சம்பவத்தோடு தொடர்புடையவர்கள்தான் எனத் தெரிய, ரகசியமாகக் கிடைத்த தகவல் சரியானதுதான் என்பது உறுதியானது.

ஆரம்பகட்ட விசாரணையில் அவர்கள் 5 பேரும் வங்கதேசத்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் இவர்களில் மூவர் விமானத்திலும் இருவர் ரயில்மூலமாகவும் இந்தியா வந்துள்ளனர்.

இவ்வாறு காவல் தரப்பு தெரிவிக்கிறது.Related image

கைதான ஐந்துபேரில், முகம்மது பல்ஷா இஸ்மாயில் ஹவல்தார் (32) பாபி அக்பர்ஷேக் (27) முகம்மது லத்தீப் ஷேக் (31) முகம்மது அக்ரம் இர்ஃபான் அலி (28) இவர்கள் நால்வரும் குல்னா பகுதியைச் சேர்ந்தவர்கள் 5வது நபர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரைச் சேர்தந்த லுக்மன் சினா மியான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதே போன்ற மற்ற சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதால் அதுகுறித்த விசாரணை தொடர்கிறது. மாவட்ட நீதிபதி இவர்களை ஏப்ரல் 2 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.Image result for கொள்ளை கும்பல்