விரைவில் பிட்காயின் வாங்க தடை?எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி

எஸ்பிஐ டெல்லி: சில நட்களுக்கு முன்பு சிட்டி வங்கி தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பிட்காயின் வாங்குவதற்குத் தடை விதித்தது. அதே போன்ற ஒரு நடவடிக்கையினைத் தற்போது எடுக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்த மின்னஞ்சல் ஒன்றுக்கு எஸ்பிஐ கார்டு நிறுவனத்தின் தலைவர் ஹர்தையால் பிரசாத் அளித்த பதிலில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களுடன் இதுகுறித்து விவாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு என இருதரப்பும் பிட்காயின் போன்ற கரன்சிகள் குறித்துத் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ள நிலையில் எஸ்பிஐ வங்கி இதுப்பொன்ற கிரிப்டோகரன்சிகள் பரிவர்த்தனையினைத் தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருவதாகவும், இதனைத் தொடர்ந்து கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.சட்டவிரோதமானதா?

சிட்டி வங்கி, ஆர்பிஐ வங்கி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கிரிப்டோகரன்சிகள் வாங்குவதைத் தடை செய்துள்ளதாக மின்னஞ்சல் மூலம் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு என இருதரப்பும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது இல்லை சட்டத்திற்கு உட்பட்டதில்லை என்று கூறி வந்தாலும் சட்டவிரோதமானது என்று இன்று வரை தெரிவிக்கவில்லை. அருண் ஜேட்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கிரிப்டோகரன்சிகள் பாதுகாப்பனது இல்லை என்றும் அதனைப் பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்டவையும் ஆபத்தானது என்றும் இதனைப் பயன்படுத்துவதை முழுமையாகக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருத்தாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிலான வங்கிகளும் கிரிப்டோ கரன்சி முதலீடுகளுக்குத் தங்களது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. கிரெட்ட் கார்டு பயன்படுத்திக் கிரிப்டோகரன்சிகளை வாங்கிய பிறகு நட்டம் அடைந்தால் பெறும் சிக்கலில் தங்களது வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுவதால் இந்தத் தடையினை விதித்து வருவதாகப் பாங்க் ஆப் அமேரிக்கா மற்றும் ஜேபி மார்கண் சேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கூறுகின்றனவெளிநாட்டு வங்கி நிறுவனங்கள்