விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Image result for vinthu anukkalஉலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.Image result for vinthu anukkal

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.

இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. இது அவ்வளவு சுலபமான நடைமுறை அல்ல. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். தன்னுடைய இலக்கை எட்டும்Image result for vinthu anukkal.