விஜய் 62 படத்தில் மற்றும் ஒரு புதிய அறிமுகம்

   ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விஜய்-62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் ஹிந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியதில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா.