வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி

Image result for tamil nadu [pengal footballஎளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, விளையாட்டு வீரர்களுக்கான அரசு விடுதியில் தங்கி, தனது திறமை ஒன்றை மட்டும் துணையாக கொண்டு முன்னேறியுள்ள நந்தினி எட்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் இருந்தே கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நந்தினியின் அணி, இந்த ஆண்டு ஒடிஷாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல்முறையாக வெற்றிபெற்று கோப்பையுடன் திரும்பியுள்ளது.

18ஆண்டு காலசாதனை முறியடிப்பு

சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி தேசிய கோப்பையை பெற்றதில்லை. கடந்த 23 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டியிட்டாலும், பெண்கள் அணியினர் அரை இறுதிவரை மட்டும் போட்டியிட்டுத் திரும்பியுள்ளனர்.

குறிப்பாக 18 ஆண்டுகள் வெற்றியை குவித்துக்கொண்டிருந்த மணிப்பூர் அணியை தமிழக அணி வென்று, அந்த அணியின் தொடர் சாதனையை முறியடித்து தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

சாதனை படைத்துள்ள அணியின் தலைவர் நந்தினியின் வெற்றிக்கு பலரும் உதவியுள்ளனர் என்கிறார்.நந்தினி

நந்தினியின் தந்தை முனுசாமி கடந்த ஆண்டு இறந்துபோன நிலையில், தாய் சித்ரா, நந்தினியின் விளையாட்டுக்கு உதவவும், குடும்ப பொருளாதார தேவைக்காகவும் டெய்லராக வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளார்.

”அப்பா கார் டிரைவராக இருந்தார். கடந்த ஆண்டு உடல் உபாதையால் இறந்தார். என் அக்காவுக்கு திருமணம் முடித்து கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அம்மா எனக்காக, நான் தொடர்ந்து விளையாடவேண்டும் என்பதற்காகவும், இதுவரை வீட்டில் மட்டுமே இருந்தவர், வேலைக்கு போகத் தொடங்கினார்.என்னுடைய உறவினர்கள் பாபு, முரளி ஆகியோர் உதவமுன்வந்தனர். அனைவரும் நான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினார்கள். என் பாட்டி கிருஷ்ணாவேணிக்கு எழுபது வயதிருக்கும். நான் விளையாடப்போகும் ஒவ்வொரு முறையும் வாழ்த்தி அனுப்புவார்,” என்கிறார் நந்தினி

பள்ளிக்காலத்தில், முதலில் ஓட்டப்பந்தையத்தில் விருப்பத்துடன் பங்கேற்ற நந்தினி, ஆசிரியர்களின் உத்வேகத்தால் கால்பந்து விளையாட்டில் காலடி எடுத்துவைத்ததாக கூறுகிறார்.

”மற்ற மாணவிகளைப்போல பரிசு சான்றிதழ்கள் வாங்கவேண்டும் என்ற விருப்பத்தில்தான் விளையாட்டில் சேர்ந்தேன். பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகள் பெற்றேன். என் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ரஜினி மற்றும் ஜெயக்குமார், கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் திறன் என்னிடம் உள்ளது என பயிற்சி கொடுத்தார்கள். ஆசிரியர்களின் நம்பிக்கைக்காக விளையாட தொடங்கினேன். அதுவே எனக்கு பிடித்த விளையாட்டாக மாறிவிட்டது,” என்று விவரித்தார் நந்தினிஎட்டாம் வகுப்பில் பயிற்சியை தொடங்கியவர் பத்தாம் வகுப்பிலேயே அகில இந்தியஅளவில் தேர்வாகி, சர்வதேச போட்டிக்கு அனுப்பப்பட்டர். 2000ம் ஆண்டில் ஜோர்டானில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஜூனியர் போட்டியில் இறுதிச்சுற்று வரை விளையாடியுள்ளார்

கல்லூரி படிப்பு தடைபடாமலும், விளையாட்டு பயிற்சியை நிறுத்தாமல் இருக்க, சென்னையில் உள்ள அரசு விடுதியில் தங்கமுடிவுசெய்தார். ”ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும், என் பெற்றோர் எப்போதும் எனக்கு உற்சாகம் ஊட்டினர். குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளை ஒருபோதும் என்னிடம் பேசவில்லை. என் விருப்பம் போல தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட அனுமதித்தே என் சாதனைக்கு காரணம்,” என்றார் நந்தினி.

தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டயப்படிப்பை படித்துவரும் நந்தினி, மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள போட்டிகளுகாக தயாராகிவருகிறார்.

சர்வதேச அளவில் விளையாடிய மணிப்பூர் அணியை தோற்கடித்துள்ளோம். எங்கள் அணியில் இருந்த பலரும் கிராமத்தில் இருந்து வந்த மாணவிகள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒவ்வொருவரின் தனித்திறனை குழுவின் வெற்றிக்காக பயன்படுத்திகொண்டோம். இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம்,” என தனது அணியின் சிறப்பைப் பற்றி குறிப்பிட்டார்தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி.

”எங்கள் குழுவின் வெற்றியை பார்த்து, தமிழக பெற்றோர்கள் பலர் தங்களது பெண் குழந்தைகளை கால்பந்தாட்டத்தில் ஈடுபடுத்துவார்கள் என்று நம்புகிறோம்,”என உற்சாகத்துடன் கூறினார் நந்தினி.

தமிழக அணியின் மற்றொரு முக்கிய வீரர் இந்துமதி. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆறாம் வகுப்பில் இருந்தே கல்பந்தாட்டத்தில் ஈடுபட்டவர். தற்போது சென்னை மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார்.

இந்த ஆண்டு நடந்த போட்டியில் பங்குபெற்ற முப்பது அணிகளில் உள்ள வீரர்களில் சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் (Best player of the tournament) என்ற பட்டத் தை பெற்றவ”உத்தரகாண்ட் அணியோடு விளையாடிய போது நான்கு கோல் எடுக்கமுடிந்தது. சிக்கிம், மேற்குவங்கம் அணிகளோடு விளையாடும் போதும் தலா ஒரு கோல் அடிக்கமுடிந்தது. சிறந்த விளையாட்டு வீரர் என்ற தகுதிபெற்றதில் மகிழ்ச்சி. தொடர்ந்து அதை தக்கவைக்க உழைப்பேன். மணிப்பூர் அணியின் தொடர் சாதனையை முறியடித்துள்ளோம் என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி,பயமின்றி, உற்சாகத்தோடு விளையாடினோம், வெற்றிபெற்றோம்,” என்கிறார் இந்துமதி.ர்

யிற்சியாளர் முருகவேந்தன் தமிழகத்திற்காக விளையாடப்போகும் அணியினரை தேர்வு செய்தபோதே அவர்களின் வெற்றி உறுதி என்று தனக்கு தோன்றியதாக கூறுகிறார்.

”இந்த முறை அணியில் உள்ள பெரும்பாலானவர்களின் விளையாட்டை கடந்த பத்து ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இவர்கள் அனைவரும் ஒரு அணியாக வந்து நின்றதும், இந்தமுறை வெற்றி உறுதி என்று நம்பினேன். ஒரு அணியின் பலம் பொருந்தியதா அல்லது இதற்கு முன்னர் வெற்றி பெற்றதா என்பது முக்கியம் அல்லImage result for tamil nadu [pengal football

விளையாட்டு தொடங்கியதும், உங்கள் அணி செலவிடும் ஒவ்வொரு நொடியையும் கவனமாக கையாளுங்கள் என்று பிள்ளைகளிடம் கூறினேன். அவர்களின் வெற்றியை அறிந்ததும் பூரிப்படைந்தேன்,” என்கிறார் முருகவேந்தன்.

அவர் மேலும் ”தமிழக அணியில் இடம்பெற்ற எல்லா பெண்களும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒவ்வொருவரும் இந்திய அணியில் விளையாடி, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திறன்படைத்தவர்கள்” என்றார்

வெற்றி கதைகள் ஒருபுறம் இருக்க, கடந்த 23 ஆண்டுகளாக, தேசிய அளவில் வெற்றி பெறும் பெண்கள் அணிக்கு கோப்பை மட்டுமே வழங்கப்படுவதாகவும், பரிசுத்தொகை அளிக்கப்படுவதில்லை என்றும் வருத்ததோடு பேசினார் தமிழக கால்பந்தாட்ட அணியின் பெண்களின் பிரிவின் பயிற்சியாளர் சீனி முஹைதீன்.

”ஆண்கள் அணி வெற்றி பெற்றால், சந்தோஷ் டிராபியோடு சுமார் ஐந்து லட்சம் பரிசுத்தொகை தரப்படுகிறது. பெண்கள் அணிக்கு பரிசு அளிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக அனைத்து இந்திய கால்பந்தாட்ட குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.நந்தினி

.