லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரைக் காப்பாற்றாமல் வீடியோ, புகைப்படம் எடுத்த மக்கள்

Image result for police attacking in roadsideகம்மம் மாவட்டத்தின் வாரங்கல் சந்திப்பில் லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அசிஸ்டண்டெ சப் இன்ஸ்பெக்டரைக் காப்பாற்றாமல் மக்கள் தங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகுநாத்பலேம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் டி.பாஸ்கர், சாலையைக் கடந்த போது லாரியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். லாரியின் இடது சக்கரம் அவரது வயிற்றில் ஏறிய பிறகும் அவர் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார், அப்போது சாலையில் குழுமிய மக்கள் கூட்டம் அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல் மொபைல் போன்களில் படம் எடுத்தது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

10 நிமிடங்கள் அவர் சாலையில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த பிறகு சில போலீஸ்காரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவரை கம்மம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இது குறித்து உதவி காவல் ஆணையர் நரேஷ் ரெட்டி கூறும்போது, “அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறவிருந்தார். இன்று காலை பந்தோபஸ்த்துக்காக அவர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்றார். பிறகு பாஸ்கர் காவல் நிலையம் திரும்பி சாலைக் கடந்து சென்று அங்குள்ள தன் இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார், அப்போது லாரி பயங்கரமாக அவர் மீது மோதியதுImage result for police attacking in roadside.

விபத்து காலை 11.30 மணியளவில் நடந்தது, அவர் லாரிக்கு அடியில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது சிலர் வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். நாங்கள் கேள்விப்பட்டு உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்தோம் ஆம்புலன்ஸ் அழைக்க நேரமில்லாததால் எங்கள் வண்டியிலேயே அழைத்துச் சென்றோம். மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. புகைப்படம், வீடியோக்கள் எடுத்தவர்களை நாங்கள் அடையாளம் காணமுடியவில்லை, ஆனால் அவர்கள் பொறுப்பற்ற செயல் பலருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது .

இறந்த காவலதிகாரி பாஸ்கருக்கு மனைவி 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்” என்றார்.Image result for police attacking in roadside khammam