ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவு: இமாலய வெற்றி பெறுகிறார் புதின்

Image result for RUSSIYAரஷ்யாவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அதிபர் புதின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராவது மீண்டும் உறுதியாகியுள்ளது.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.Image result for RUSSIYA

இதில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்/ ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் குருடினின், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் விளாடிமிர் சிரினோவ்ஸ்கி உட்பட ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நேற்று நடைபெற்றது. 109 நாடுகளைச் சேர்ந்த 1,500 பார்வையாளர்கள் வாக்குப்பதிவை கண்காணித்தனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ரஷ்ய ஊடகங்கள் மற்றும் மாஸ்கோ அரசியல் வட்டாரங்களின் கணிப்புப் படி விளாடிமிர் புதின் 4-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஏற்கனவே தெரிவித்தன. அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே புதின் முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி பாதிக்கும் அதிகமான ஓட்டுகள் எண்ணப்பட்டு விட்டன.

அதில் 75 சதவீத வாக்குகளை புதின் பெற்றுள்ளார். இதனால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார். 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.

பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அதிபரானார்.Related image