மொபைலை இந்த இடங்களில் தவறி ? கூட வைக்க கூடாத சில இடங்கள்

உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனால் வரக்கூடிய பாதிப்புகளும் அதிகமாக உள்ளது.
அதனால் நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சில இடங்களில் வைத்திருப்பதை தவிர்த்தால், ஆபத்தான விளைவுகள் வராமல் தடுக்க முடியும்.
மொபைலை எந்த இடங்களில் வைக்கக் கூடாது?

மொபைலை பின்பக்கம் மற்றும் பின்பக்க பாக்கெட்டில் வைக்கக் கூடாது. ஏனெனில் அதனால் தொலைபேசியின் மின்காந்த கதிர்வீச்சானது உடல்நலம், விந்தின் தரம் மற்றும் அளவை மோசமாக பாதிக்கும்.
பெண்கள் அவர்களின் மேலாடைகளுக்குள் மொபைலை வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
தொடை அருகில் மொபைலை வைப்பதால், அது இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்தி விடும். எனவே தொடை அருகில் மொபைலை வைக்கவே கூடாது.
சருமத்திற்கு எதிராக செல்போனை வைக்கக் கூடாது. ஏனெனில் திரை மற்றும் தொலைபேசி பட்டன்களில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் மின்காந்த கதிர்வீச்சு நெருக்கமாகி, பாதிப்பை உண்டாக்கும்.Image result for போன் வைக்க கூடாத இடங்கள்
தொலைபேசியை சார்ஜிங் செய்யும் போது அதன் அருகில் இருக்க கூடாது. ஏனெனில் அதனால் மின்காந்த கதிர்வீச்சுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிர்ச்சியான மற்றும் வெப்பமான இடங்களில் மொபைலை கட்டாயம் வைக்கக் கூடாது. ஏனெனில் அதனால் மின்னணு இயந்திரங்கள் நமக்கு தீங்கை விளைவிக்கும்.
குழந்தைகளின் அருகில் மொபைலை வைக்கக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குழந்தைகளுக்கு செயல்திறன் மற்றும் கவனக்குறைவு போன்றவை ஏற்படும்.
மொபைலை தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் நோட்டிபிகேஷன் வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியை பாதித்து, தலைவலியை உண்டாக்கும்Image result for போன் வைக்க கூடாத இடங்கள்.