மும்பையில் சிக்னலுக்கு காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளை: துரத்தி ஓடியும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட ருசிகர சம்பவம்

Image result for கொள்ளை தமிழ் நாடுசாலையில் சிக்னலுக்காக காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற இருவரை துரத்திச் சென்றும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட சம்பவம் மும்பையில் நேற்று நடந்துள்ளது.

மும்பையின் போரிவாலி பகுதியில் காலை 11 மணி.. ஆர்.எம்.பட் சாலையில் காரில் வந்துகொண்டிருந்த மக்வானா, ரெட் சிக்னல் விழுந்தவுடன் காரை நிறுத்தினார். அப்போது கார் அருகே இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் கார் கண்ணாடியைத் தட்டினார். கண்ணாடியைத் திறந்தபோது இன்னொருவர் அவரை அழைப்பதுபோல திசை திருப்பினார்.

அவரிடம் ”என்ன” என்று கேட்பதற்குள் கண்ணாடியைத் தட்டியவர் காரிலிருந்த பணப் பையை எடுத்துக்கொள்ள இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதை சற்றும் எதிர்பாராத மக்வானா காரை அப்படியே போட்டுவிட்டு அவர்களை துரத்தி ஓடத் தொடங்கினார். சிறிது தூரம் ஓடியதும் பணத்திற்குச் சொந்தக்காரர் துரத்தி ஓடிவருவதைப் பார்த்த இருவரும் அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்தனர். அவர்கள் சென்ற ஆட்டோவைப் பின்தொடர்ந்து மக்வானாவும் இன்னொரு ஆட்டோவை அழைத்து ஆட்டோவிலேயே துரத்திச் சென்றார்.

இதற்கிடையில் இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் டேவிதாஸ் ரசல் மற்றும் ஏஎஸ்ஐ மசேகர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.Image result for கொள்ளை தமிழ் நாடு

போலீஸ்காரர்கள் ரசல் மற்றும் மசேகர் இருவரும் இன்னொரு ஆட்டோ பிடித்து ஏற்கெனவே கொள்ளையர்களைப் பின்தொடரும் மக்னாவோடு சேர்ந்துகொண்டு துரத்தத் தொடங்கினர்.

சிறிது தூரத்திலேயே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த இரண்டு திருடர்களையும் மக்வானா நெருங்கிச் சென்று மடக்கிப் பிடித்தார். இதற்கு அங்கிருந்த பொதுமக்களும் உதவிக்கு வந்தனர். பிடிபட்ட தோபி மட்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக வந்தவர் எப்படியோ தப்பிவிட்டார்.

அதிர்ஷ்டவசமாக, மக்கள் கையில் சிக்கிக்கொண்ட தோபியிடம்தான் அந்த ரூ.5லட்சம் பணமிருந்த பை இருந்தது.

பிடிபட்ட தோபி, போக்குவரத்து நெரிசலான இடங்களில் கார்களிலிருந்து பையை திருடும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னுள்ள கூட்டத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி கொள்ளை மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Image result for பாம்பே கொள்ளை