மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்திய வுக்கு எதனையாவது இடம் தெரியுமா

Image result for இந்திய டூரிஸ்ட்இந்தியர்கள்தான் உலகிலேயே மிக மகிழ்ச்சியானவர்கள் என இனிமேலும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. சமீபத்தில் ஐ.நா. வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2012-ம் ஆண்டு முதல், ஐ.நா. அமைப்பு ஆண்டுதோறும் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஒருவரின் வாழ்நாள் கால அளவு, சமூகத்தின் ஆதரவு, ஊழலின் அளவு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவீடு நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு வெளியான அறிக்கையில் இடம்பெற்றுள்ள 156 நாடுகளில் இந்தியா 133-வது இடம் வகிக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு 122-வது இடத்திலிருந்த இந்தியா மிகவும் பின்தங்கி 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளும் இந்த அறிக்கையில் முன்னேறிய இடத்தில் உள்ளன. பூடான் 97-வது இடத்தையும், நேபாளம் 101-வது இடத்தையும், இலங்கை 116-வது இடத்தையும், சீனா 86-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஐ.நா.வின் அறிக்கையின்படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? பின்லாந்து நாடுதான். பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.Related image

அமெரிக்கா 18-வது இடத்தையும், பிரிட்டன் 19-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 20-வது இடத்தையும் வகிக்கின்றன.

இந்த உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலகளவில் அச்சுறுத்தும் காரணிகளாக விளங்கக்கூடிய உடல் பருமன், மன அழுத்தம் ஆகியவை குறித்தும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. மேலும், மகிழ்ச்சியான நாடுகளுக்கு இடம்பெயர்பவர்கள் அந்நாட்டின் குடிமக்களைவிட மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.Image result for இந்திய கிராமம்