மனிதாபிமானமற்ற செயல்…

Image result for சிகாகோசிகாகோவிலிருந்து அட்லாண்டா செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 24 வயது ஆம்ஸ்ட்ராங் நடந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். “ஒரு தந்தை தன்னுடைய மகளுடன் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பும்போது குழந்தை மிகவும் பயந்துவிட்டது. தன் இருக்கையில் அமராமல் தந்தை மடியில் அமர வேண்டும் என்று அழுதது. தந்தையும் சமாதானம் செய்தார். சாப்பிடுவதற்கு பாப்கார்ன் கொடுத்தார். ஆனால் குழந்தை பயத்தில் அழுதுகொண்டே இருந்தது. அருகில் இருந்த சிலர் விமானப் பணிப் பெண்ணிடம் புகார் அளித்தனர். அவர் குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லிக் கேட்டார். அந்தத் தந்தையால் என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தை தானாகவே அழுகையைக் குறைத்தது. ஆனாலும் அருகில் இருந்தவர்கள் புகார் கொடுக்கவும், பாதுகாப்பு அதிகாரி வந்தார். விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே செல்வதாகவும், விமானத்தை விட்டு இறங்கும்படியும் கேட்டுக்கொண்டார். இதைக் கேட்டு அந்தத் தந்தை அதிர்ச்சியடைந்தார். என்னைப் போன்ற சக பயணிகளும் அதிர்ந்தோம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அப்பாவையும் குழந்தையையும் இறக்கிவிட்டுவிட்டு, விமானம் கிளம்பியது” என்கிறார் ஆம்ஸ்ட்ராங். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், இந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.Image result for சிகாகோ விமானம்