மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 3 மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி

Image result for BUILDING COLLAPSEமத்தியபிரதேசத்திலுள்ள 3 மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தூர் நகரத்திலுள்ள சர்வாத்தே பஸ் நிலையம் அருகே 60 ஆண்டு பழமையான ஓட்டல் உள்ளது. 3 மாடி உடைய இந்த ஓட்டலின் கட்டிடத் தூண் மீது நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாக வந்து மோதியது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் 10 பேர் பலியாயினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர் என்று சோட்டி குவாலிதோலி போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சு காம்ளே தெரிவித்தார். இதையடுத்து மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. காயமடைந்த அனைவரும் எம்.ஒய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.Image result for BUILDING COLLAPSE

பழமையான அந்தக் கட்டிடம் ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Image result for BUILDING COLLAPSE

இதனிடையே இந்தூர் நகரசபை ஆணையர் மணீஷ் சிங் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, “மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தை ஏன் அகற்றாமல் இருந்தார்கள் என்பது புரியவில்லை. ஆனால் பழைய கட்டிடத்தை புதிய கட்டிடம் போவே வண்ணம் பூசி ஏமாற்றி வந்துள்ளார் கட்டிட உரிமையாளர். இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்படும்” என்றார்