மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து 15 வயது பெண்ணுக்குத் தொல்லையால் தற்கொலை முயற்சி; ‘அநியாய’ சமரசம் பேசிய பஞ்சாயத்து

Related imageஉத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் 15 வயது சிறுமியின் வீட்டுக்கு குடித்து விட்டு வந்த நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருப்பது பரபரப்பானது.

ஹமீர்பூரில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிபின் பிரஜாபதி என்ற இளைஞர் இவரைப் பின் தொடர்ந்து வந்து மோசமான வார்த்தைகளைக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்தப் பெண் இவரை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டை மாற்றிக் கொண்டு ஹமீர்பூர் கிராமத்துக்கு வந்துள்ளனர் பெண்ணின் குடும்பத்தினர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது போதையில் வந்த பிரஜாபதி கதவைத் தட்டியுள்ளார், கதவு திறக்கப்படவில்லை என்றவுடன் சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்குள் புகுந்த அவர் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து தன்னுடன் வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். பெண் மறுக்கவே அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பெண்ணின் பெற்றோரை தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளாImage result for கிராமத்து பெண்கள்ர்.

ஆனால் தந்தை பிரஜாபதி மேல் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியதால் ஆபத்து நீங்கியது, பிறகு போலீஸார் பிரஜாபதியை கைது செய்தனர்.

மறுநாள் பஞ்சாயத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட, இது பாலியல் துன்புறுத்தலாகப் பதிவு செய்யப்பட வேண்டாம் என்று பெண்ணின் குடும்பத்தினரை பஞ்சாயத்தார் வற்புறுத்தினர், மாறாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் பதியட்டும் என்று புகாரை மாற்றியளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் ஆகியோரும் ஆயுதம் வைத்ததாக வழக்குப் போடுவதையே விரும்பினர். மேலும் சிறையிலிருந்து வந்தவுடன் பழி வாங்குவேன் என்று பிரஜாபதி கூறியதற்கு பஞ்சாயத்தார், அவ்வாறு நடக்காது பார்த்துக் கொள்கிறோம் என்று வாக்குறுதியளித்துள்ளனர்.Image result for கிராமத்து பெண்கள்

உண்மையான புகாரைக் கொடுக்க முடியாத நிலையில் அவமானமடைந்த இந்தப் பெண் ஹேர் டை-யை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது சாதாரணமாக இருக்கிறார். இதனையடுத்தே பெற்றோர் புகார் அளிக்கத் தலைப்பட்டனர்.

அந்தப் பெண் கூறுவது என்னவெனில், வீட்டில் ஏறிக்குதித்து வந்து திருமணம் செய்து கொள் என்று ஒருவர் வருகிறார் என்றால் சமூகம் பெண்ணைத்தானே குற்றம் கூறும் என்கிறார், அதனால் அவமானம் தாங்கவில்லை என்பதால் தற்கொலையைத் தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார்.

தற்போது உயரதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர், சமரசம் செய்ய முயற்சித்த பஞ்சாயத்து பெருசுகளும் சிக்கியுள்ளனRelated imageர்.