மணமேடையில் மருமகளை முத்தமிட்ட மாமானார் – திருமணத்தில் பரபரப்பு (வீடியோ உள்ளே

Uncomfortable  மணமேடையில் மருமகளை முத்தமிட்ட மாமானார் - திருமணத்தில் பரபரப்பு (வீடியோ) Uncomfortable

குடி குடியை கெடுக்கும், குடிப் பழக்கம் நல் உறவுகளை கெடுக்கும் என்பார்கள். இது உலகம் முழுக்க இருக்கும் அனைத்து ‘குடி’ மக்களுக்கும் பொருந்தும்.

தினந்தோறும் நம்மை சுற்றியும், செய்து வாயிலாகவும், செவி வழியாகவும் இதற்கான சான்றுகளை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், குடி போதையில் நடக்கும் சில சம்பவங்கள் வாழ்நாள் முழுக்க ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அப்படியாக சீனாவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் தான் இது. தனது மகனின் திருமண விழாவில், புது மருமகளை குடி போதையில் கட்டாயப்படுத்தி விருந்தினர் முன் முத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார் மணமகனின் தந்தை.

இந்த கிழக்கு சீனாவின் ஒரு பகுதியில் நடந்துள்ளது. திருமண வரவேற்ப்பு நிகழ்வின் போது தனது மகனை திருமணம் செய்து கொண்ட புது மருமகளை குடி போதையில், மணமகனின் தந்தை கட்டாயப்படுத்தி முத்தமிடுவது போன்ற காட்சிகள் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சீன சமூக தளங்களில் வைரலாக பரவின

என்ன தான் குடி போதையாக இருந்தாலுமே கூட, நூற்றுக்கும் மேலான விருந்தினர் குழுமியிருக்கும் இடத்தில், மருமகளை அப்படி கட்டாயப்படுத்தி இதழ்களில் முத்தமிட்டது மிகவும் கேவலமான செய

ந்த காணொளிப்பதிவு இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்து, அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு உறவினரால் சமூக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீன ஊடகங்களில் வெளியான செய்தியின் தகவல்கள் படி, இந்த நிகழ்வு கடந்த பிப்ரவரி 22ம் நாள் நடந்ததாகவும். இந்த நிகழ்வி ஜியாங்சூ மாகாணத்தின் இருக்கும் வூஸ்ஹௌ இன்டர்நேஷனல் பிளாசா எனும் ஹோட்டலில் நடந்துள்ளது என்ற தகவல் சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

புது மருமகளை, விரட்டி, விரட்டி எட்டு நொடிகள் கட்டாயப்படுத்தி இதழ் முத்தமிடும் காட்சியானது பதிவாகியுள்ளது. புது மணப்பெண் சீன பாரம்பரிய திருமண ஆடை அணிந்திருந்தார்.

மேடையை நோக்கி அவர் நடந்து வரும் சமயத்தில் தான் மாமானார் தனது மருமகளை இப்படி ஒரு தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

சீனாவின் சமூக செயலியான WeChatல் இந்த நிகழ்வு குறித்து ஒரு புரளி செய்தி வைரலாக பரவி வருகிறது. அதில், தனது தந்தை என்றும் பாராமல் அவர் செய்த இந்த வக்கிரமான செயலுக்கு, மகன் புரட்டி எடுத்து அடித்ததாக அந்த செய்தி பரவி வருகிறது.

இது குறித்து இன்னொரு வீடியோ பதிவும் சீன சமூக தளத்தில் பரவி வருகிறது. அதில் இரண்டு குடும்பங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன.

அந்த சம்பவத்தையும், இந்த சம்பவத்தையும் சேர்த்து. மருமகளை முத்தமிட்ட பிறகு, அந்த இரு குடும்பத்தார் இடையே நடந்த சண்டை தான் என்ற பெயரில் அந்த வீடியோ பதிவி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், போலீஸ் விசாரணையில் அந்த வீடியோ ஜியாக்சூ மாகாணத்தின் வேறு ஒரு நகரில் பிப்ரவரி 15ம் நாள் நடந்த பிரச்சனையின் வீடியோ அது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்மந்தப்பட்ட அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக தளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சீன சமூக தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.