மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது!!

தனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

வட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த ஸ்டீவன் வோல்ட்டர் பிளாடி எனும் 42 வய­தான நபரும், 20 வய­தான அவரின் மகள் கெத்தி ரோஸ் பிளாடி என்பவருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

1998 ஜன­வரி மாதம் பிறந்­தவர் கெத்தி ரோஸ் பிளாடி. கெத்தி ரோஸை சிறு பரு­வத்­தி­லேயே தந்தை ஸ்டீவன் வோல்ட்டர் பிளா­டியும் அவரின் தாயாரும் மற்­றொரு தம்­ப­திக்கு சட்­டபூர்வமாக தத்துக் கொடுத்­தி­ருந்­தனர்.

கெத்தி ரோஸ் பிளாடி தனக்கு 18 வய­தா­ன­வுடன் தன்னைப் பெற்ற தாய், தந்­தையை தேடிக் கண்­டு­ பி­டித்து அவர்­க­ளுடன் இணைந்து வாழ முற்­பட்டார்.

Steven-Pladl-copy  மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது!! Steven Pladl copyபின்னர் பெற்­றோரைக் கண்­டு­பி­டித்த கெத்தி ரோஸ் வேர்­ஜீ­னியா மாநி­லத்தின் ரிச்மன் நக­ரி­லுள்ள அத்­தம்­ப­தியின் வீட்­டுக்கு 2016 ஆகஸ்ட்டில் குடி­பெ­யர்ந்தார் என நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­ருடம் நவம்பர் மாதம் ஸ்டீவன் பிளா­டியின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.

தான் அவ்­வீட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முன்னர், தனது கணவன் ஸ்டீவன் பிளாடி, தமது மகளின் அறையில் தரையில் படுத்­து­றங்க ஆரம்­பித்­த­தாக ஸ்டீவன் பிளா­டியின் மனைவி தெரி­வித்­துள்ளார்.

Katie-Rose-Pladl-copy  மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது!! Katie Rose Pladl copy2017 மே 23 ஆம் திகதி கெத்தி கர்ப்­பி­ணி­யா­க­வுள்­ள­தா­கவும் அவரின் குழந்­தைக்கு ஸ்டீவன் பிளா­டியே தந்தை எனவும் சஞ்­சி­கை­யொன்றின் மூலம் தான் அறிந்­த­தா­கவும் அதி­கா­ரி­க­ளிடம் ஸ்டீவன் பிளா­டியின் மனைவி தெரி­வித்­துள்ளார்.

ஸ்டீவன் பிளா­டிக்கு வேறு இரு பிள்­ளை­களும் உள்­ளனர். அப்­பிள்­ளை­க­ளுடன் கெத்தி ரோஸை வளர்ப்புத் தாயா­ராக ஸ்டீவன் பிளாடி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளார்.

2017 மே 31 ஆம் திகதி ஸ்டீவன் பிளா­டியும் அவரின் மகள் கெத்தி ரோஸும் வேறு ஒரு ஊருக்கு குடி­பெ­யர்ந்­தனர். கடந்த செப்­டெம்பர் மாதம் கெத்தி ரோஸ் ஆண் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தார்.

இவர்கள் இரு­வ­ரையும் கைது செய்­வ­­தற்கு 2017 நவம்பர் 27 ஆம் திகதி பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டது. சில தினங்­க­ளுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் வீடொன்றில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தலா 10 லட்சம் டொலர் (சுமார் 15.4 கோடி ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.