போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி

Image result for சென்னை ரௌடிதிருவொற்றியூரில் போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், ராசய்யா, ஜோதிபாசு. ரவுடிகளான 3 பேரும் மண்ணடி ரவுடி விஜயகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் அண்ணாமலை என்பரை கொலை செய்ய 3 பேரும் மீண்டும் திட்டம் தீட்டியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மரத்தில் தாவி தப்பிக்க முயற்சி

அதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் தேடியபோது திருவொற்றியூரில் ஒரு வீட்டின் 3 மாடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று இரவில் அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேரும் மாடியில் இருந்து ஒரு மரத்தின் மீது தாவி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

இதில் ஜோதிபாசு மட்டும் மரம் வழியாக இறங்கி தப்பிச் செல்ல, மோகன்ராஜ், ராசய்யா இருவரும் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டனர். இருவரையும் போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மோகன்ராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். படுகாயம் அடைந்த ஜோதிபாசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுImage result for ரௌடிகள்.