போலி விற்பனை கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் கடன்: கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது ரூ.824 கோடி மோசடி புகார்- வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை

Image result for கனிஷ்க் கோல்டு நிறுவனம்போலி கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது சிபிஐயில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, கனிஷ்க் நிறுவனம், உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்தியது.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) சென்னை மண்டல பொது மேலாளர் ஜி.டி.சந்திரசேகர், டெல்லி சிபிஐ இணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்ப தாவது:

சென்னை தி.நகரில் ‘கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்’ (கேஜிபிஎல்) என்ற தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் வசிக்கும் பூபேஷ் குமார் ஜெயின், அவரது மனைவி நீதா ஜெயின் ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள புக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் ‘கிரிஸ்’ என்ற பெயரில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்களை அமைத்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் நகை கள் சில்லறை விலையில் வாடிக்கையாளர்களுக்கும் மிகப் பெரிய நகைக் கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்காக எஸ்பிஐ வங்கியின் சார்பில் ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ.50 கோடி கடன் தர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்காக பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளிடமும் கடன் பெற ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் சந்தைகளில் தங்கம் வாங்கி வர்த்தகத்தில் கனிஷ்க் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தின் வரவு -செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் நிறுவனத்தின் லாபம் அதிகரித்ததாகவே கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே அடுத்தடுத்து புதிய கடன்களும் இந்த நிறுவனத்துக்கு வழங் கப்பட்டன.Image result for கனிஷ்க் கோல்டு நிறுவனம்

இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்கு ரூ.747 கோடி கடன் அளித்தன. இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கி ரூ.215 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.115 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.45 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.20 கோடி, கார்பரேஷன் வங்கி ரூ.20 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.30 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.45 கோடி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.37 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ.50 கோடி, எச்டிஎப்சி வங்கி ரூ.25 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.25 கோடி, ஆந்திரா வங்கி ரூ.30, யூசிஓ வங்கி ரூ.40 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.50 கோடி என மொத்தம் ரூ.747 கோடி கடன் அளிக்கப்பட்டது. இந்தக் கடனுக் காக கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு சொத்துகளின் உறுதிப் பத்திரம் பெறப் பட்டன.Image result for கனிஷ்க் கோல்டு நிறுவனம்

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடன் கொடுத்த வங்கிகளுக்கு கனிஷ்க் கோல்டு நிறுவனம் வட்டியையும் அசல் பணத்தையும் செலுத்தவில்லை. இதுதொடர்பாக கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர்களை வங்கிகளின் சார்பாக தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

வங்கிக் கூட்டமைப்பு அதிகாரிகள் தரப்பில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் அலுவலகம், நகைகள் தயாரிப்புக் கூடம், ஷோரூம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவை செயல்படாத நிலையில் இருந்தது தெரிந்தது.

மேலும், 2009-ம் ஆண்டில் இருந்து கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின், நகை இருப்பு விவரம், விற்பனை, லாபம் குறித்து போலியான ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் வட்டியுடன் சேர்த்து எஸ்பிஐ உள்ளிட்ட 14 வங்கிகளிடம் ரூ.824 கோடியே 15 லட்சம் கடன் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்த புகாரின் பேரில் கனிஷ்க் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள கனிஷ்க் நிறுவனம், அதன் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் வீடு, மதுராந்தகம் அருகே உள்ள நகை தயாரிப்பு கூடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை தீவிர சோதனை நடத்தினர். தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Image result for கனிஷ்க் கோல்டு நிறுவனம்