பொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Image result for பொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை மையத்திலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படை யின் மிக முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ். மிகவும் கனரக ஆயுதமான இது, முதல் முறையாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கேஐ ரக ஜெட் போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஏவுகணை நேற்று மீண்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷ்யாவின் என்பிஓ மாஷினோஸ்ட்ராயனியாவின் கூட்டு முயற்சியில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேகமான ஏவுகணையாக கருதப்படும் இது, ஒலியைப்போல 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏவுகணை சுகோய்-30 ரக போர் விமானத்தில் இணைக்கப்பட உள்ளது. மேலும் சுகோய்-40 ரக போர் விமானத்தில் இணைப்பது தொடர்பான முயற்சியும் நடைபெற்று வருகிறதுImage result for பொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி