பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

Image result for காமராஜர்பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியதுImage result for காமராஜர்.

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்Image result for காமராஜர்

அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த நேரம் அது. அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.
”பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? காமராஜரை, பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர்., குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அப்போது காமராஜர் “அமெரிக்கா சென்ற தமிழர் அண்ணா துரையை சந்திக்க நிக்ஸன் மறுத்து விட்ட போது, நான் எப்படி நிக்ஸனை சந்திப்பது?”என்று காமராஜர் திருப்பி கேட்டார். அவரது பதில் தமிழக மக்களின் உள்ளத்தில் பதிந்து விட்டது.

DSC06049 (Large)
அப்போது காமராஜர் எந்த உயரிய பதவியிலும் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.
காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியிலே தொண்டனாக, பின்னர் தலைவனாக காமராஜரின் பேச்சு வித விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராஜர் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்தியா முழுவதுக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன.
காமராஜர் என்றும் பதவியைத் தேடி அலைந்தது இல்லை. பதவிகள் தான் அவரைத்தேடி வந்தன. அப்படி வந்த அதிகபட்ச பதவிகளையும் அவர் வேண்டாம் என்றே கூறிவிட்டார்.

Kamarajar The King Maker - Very Rare Photo Collection Part III (16)
காமராஜர், விருதுப்பட்டியில் வசித்துவந்த தனது தாயாருக்கு மாதா மாதம் செலவுகளுக்காக ரூபாய் 120 அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் முதலமைச்சர் ஆன பின்பு சிவகாமி அம்மாள் காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர்,”நீ முதலமைச்சராக ஆன பின்பு , என்னை வந்து ஏகப்பட்ட பேர்கள் வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு டீ, காபி, சோடா வாங்கிக் கொடுக்கக்கூட என்னால் முடியவில்லை. எனவே எனக்கு அனுப்பும் மாதாந்திரப் பணம் 120 ரூபாயை, 150 ரூபாயாக் கூட்டி அனுப்பி வைக்கவும்” என்று எழுதியிருந்தார்.
காமராஜர் இந்தக் கடிதத்தைப் படித்த பின்னரும், தாயாருக்கு மாதா மாதம் வழக்கம் போல் அனுப்பும் 120 ரூபாயைத்தான் அனுப்பி வந்தார். ஏன் கூடுதல் பணம் அனுப்பவில்லை என்று கேட்ட நண்பர்களிடம் ”அப்படி நான் தாயாருக்கு அதிகமாகப் பணம் அனுப்பினால் அவுங்க வீட்டிலிருக்காமல், வெளியூருக்கும் போய்விடுவார்கள். வயதான காலத்தில் வீட்டில் இருப்பதுதான் நல்லது” என்றார்.
மற்றோர் முறை சிவகாமி அம்மையார் ஒரு நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். இதைப்பார்த்த காமராஜர் அந்த ரூபாய் நோட்டை அவரிடமிருந்து பிடுங்கி, நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.

Image00017
ஒரு முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜரைப் பார்த்து நண்பர் ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே காமராஜர்,”தாயாருக்கு செலவுக்கு பணம்அனுப்பி வைக்கிறேன். எனது சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று பதில் அளித்துள்ளார். கட்சியோடு அரசையும், அரசோடு கட்சியையும் கலக்காதவர் காமராஜர், மட்டுமே.
காமராஜர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த போது, காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காக, தனது தாய் மாமனான காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.
அதற்குக் காமராஜர்,”நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ, என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இன்றைய அரசியல்வாதிகளில் காமராஜரைப் போல் யாரையும் பார்க்க இயலுமா?.10406526_410071602468029_2350490018754981541_n

.