புகழ் மழையில் தினேஷ் கார்த்திக்

Image result for dinesh karthikஇத்தகைய மந்தமான பிட்சில் ரூபல் ஹுசைன் போன்ற ஆக்ரோஷமான திறமையான வீச்சாளரை 6 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது சாதாரண விஷயமல்ல. எதிர்முனையில் இருந்த இன்னொரு தமிழ்நாட்டு வீரரான விஜய் சங்கர் மட்டையிலிருந்து காற்று வந்து கொண்டிருந்த நிலையில் அவரையும் தன் இன்னிங்ஸினால் காப்பாற்றினார் தினேஷ் கார்த்திக்.இந்நிலையில் ட்விட்டரில் அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.

சச்சின் டெண்டுல்கர்:

அபாரமான வெற்றி! தினேஷ் கார்த்திக் சூப்பர்ப் பேட்டிங், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் கிரேட் இன்னிங்ஸ்! இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான பினிஷிங்!

பயிற்சியாளர் ரவிசாஸ்திரி:

No game is over till the fat lady sings. DK, you beauty! No game is over

யுவராஜ் சிங்:

யூ பியூட்டி தினேஷ் கார்த்திக்.

மொகமத் கயீஃப்Image result for dinesh karthik

தினேஷ் கார்த்திக் உண்மையிலேயே பரபரப்பான பேட்டிங். நீண்ட நாட்களுக்கு நினைவு வைக்கும்படியான இன்னிங்ஸ். நீண்ட காலமாக இருக்கிறார். சோதனைகளைக் கடந்தார். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதை நிரூபித்தார். இது கார்த்திக் கணம்.

மைக்கேல் வான்:

29 ரன்கள் 8 பந்துகளில், கடைசி பந்தில் சிக்சரில் வெற்றி, முறையான பினிஷிங்.

ஆஞ்சேலோ மேத்யூஸ்:

அருமையான கிரிக்கெ ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, டஃப் லக் பங்களாதேஷ்.

மிட்செல் மெக்லினாகன்:Image result for dinesh karthik

8 பந்துகளில் 29 ரன்கள்! அனைத்து காலங்களிலும் சிறந்த பினிஷிங் இன்னிங்ஸ் ஆக நினைவில் இடம்பெறும்.

சுரேஷ் ரெய்னா:

வலையில், களத்தில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், நாங்கள் அணியைக் கட்டமைக்கிறோம். அணிக்கு வாழ்த்துக்கள், பெருமையாக உள்ளது, மிகப்பிரமாதமான இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக், ரோஹித்.

சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண் ஆகியோரும் தினேஷ்கார்த்திக்கை புகழ்மழையில் நனைத்தனர்.

யூசுப் பத்தான்:

வெல் டன் டீம் இந்தியா! என்ன ஒரு பிரமாதமான வெற்றி! நெருக்கடி தருணத்தில் என்ன ஒரு இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக். இளம் வீரர்கள் இந்தத் தொடரில் அற்புதமாக ஆடிவிட்டனர்.

ராஜீவ் சுக்லா: அருமையான போட்டி, என் பார்வையில் ஒட்டுமொத்த பெருமைகளும் தினேஷ் கார்த்திக்குத்தான் போய் சேர வேண்டும். புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்தார் தினேஷ்.Image result for dinesh karthik