பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Image result for KASMIRகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிய ரக ராக்கெட் குண்டுகள் வீசிநடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதை மதித்து நடக்காமல் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. ஜம்முகாஷ்மீர் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நம்முடைய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுக்கின்றனர். சில நேரங்களில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாகிக் கொண்டு இருக்கிறது.Image result for KASHMIR STREET

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம், பாலாகோட் பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குல் நடத்தினர். இந்த தீவிரத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினெல் தேவேந்தர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று காலை 7.45 மணி அளவில் பாலாகோட் பகுதியில் உள்ள பிம்பர் காலி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். மக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக வைத்து தாக்கி இருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் சவுத்ரி முகமது ரம்ஜான் என்பவரின் வீடு மீது ராக்கெட் குண்டு விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளர், ஒரு பெண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்Image result for KASHMIR STREET