நான் கடவுள்: அந்தரத்தில் பறந்த விமானத்தில் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ!

அமெரிக்காவில் விமானம் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த போது பெண் பயணியொருவர் கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து இதாகோ மாகாணம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.அப்போது விமானத்தில் இருந்த ஒரு பெண் திடீரென நான் கடவுள், நான் கடவுள் என கத்தி கொண்டே விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த பெண்ணை போராடி தடுத்தனர்.

பின்னர் விமானமானது எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தடைந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை விசாரிக்க அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

அவர் கைது செய்யப்பட்டார் என்பதற்கான தகவல் வெளியாகாத நிலையில், இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது