திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள்

10-1521108637  திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள் - இரகசிய டைரி 10 1521108637எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அதுமட்டுமின்றி, சொந்தமாக சிறியளவில் ஒரு டிரான்ஸ்போர்ட் தொழிலும் செய்து வருகிறேன்.

வீட்டில் எத்தனையோ முறை என்னை கட்டாயப் படுத்தியும் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் எனக்கும், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் இருக்கும் தொடர்பு தான்.

அவளது குழந்தைகளுக்கு முறையே ஆறு, மூன்று வயதாகிறது. நாங்கள் இருவரும் பலமுறை தாம்பத்திய உறவில் ஈடுபட்டது உண்டு. ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம்.

எங்கள் காதல் உண்மையானது தான். தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி மட்டுமே, தனக்கு பிடிக்காத கணவனுடன் அவள் வாழ்ந்து வருகிறாள். நான் அவளையும், அவளது குழந்தைகளையும் மனதார ஏற்றுக் கொள்ள தயார்.

ஆனால், ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல், நாங்கள் இருவருக்குமே பெரும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறோம்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?7-1521108615  திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள் - இரகசிய டைரி 7 1521108615

என்ன காரணம்? முதலில் நீங்கள் உறவில் இருந்து வரும் திருமணமான பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.

ஒருவேளை குடித்துவிட்டு, அடித்துக் கொடுமைப் படுத்துகிறார் என்று ஏதாவது காரணம் இருந்திருந்தால், நீங்களே அதை உங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இங்கே குறிப்பிட்டு இருக்கலாம். நீங்கள் கூறுவதில் முழுக்க, முழுக்க, உங்கள் காதல் நேர்மையானது என்பதை வலுக்கட்டாயமாக கூறுவது போல தான் இருக்கிறது.

இரண்டு குழந்தை எப்படி? கணவனுடன் விருப்பமே இல்லாமல் தான் இரண்டு குழந்தைகளுக்கு அந்த பெண் தாய் ஆனாளா? அப்படியே உங்கள் காதல் நேர்மையானது, உன்னதமானது என்பதை ஏற்க மறுப்பதற்கு முக்கிய காரணம்.. நீங்கள் “அடிக்கடி” உடலுறவில் இணையும் சமாச்சாரம்.

ஒரு சுகத்தை கண்டு உணர்ந்து அதைவிட்டு வெளியே வர முடியாமல் நீங்கள் இருவரும் அதை தொடர்ந்து வருகிறீர்கள். கொஞ்ச நாட்கள் இந்த தவறை செய்யாமல் இருந்து பாருங்கள்.

நீங்கள் கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்து பாருங்கள். அப்போதும் இதே காதல் தொடர்கிறதா? என்று பார்க்கலாம். நிச்சயம் இருக்காது.

மோகம்! உங்கள் இருவருக்கும் இடையே இருப்பதற்கு பெயர் மோகம். ஒருவேளை நீங்கள் ஆரம்பத்திலேயே பெற்றோர் பேச்சைக் கேட்டு திருமணம் செய்திருந்தால்., உங்களுக்கென ஒரு பெண் துணை கிடைத்திருந்தால்… இந்த பெண்ணை விட்டு எப்போதோ பிரிந்து வந்திருப்பீர்கள்.

மது,புகை மட்டுமல்ல… மாதுவும் ஒரு கொடிய போதை தான். நீங்கள் மாதுவின் உடல் மீதான மோக உறவில் சிக்கித் தவிப்பது போல தான் தெரிகிறது.

4-1521108589 திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள் – இரகசிய டைரி 4 1521108589
எத்தனை நாட்களுக்கு…
உடலுறவு என்பது திருமண பந்தத்தின் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே இனிக்கும். அதைவிட சுவையான பல விஷயங்கள் இல்லற பந்தத்தில் இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டாலே கூட நீண்ட நாட்கள் இணைந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இப்போது யாருக்கும் தெரியாமல் இணைவது… திருப்பு வெண்ணெய் போல சுவையாக தான் இருக்கும்.

இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்கலாம் எனும் போதுதான், உடலுறவை தாண்டி ஒரு காதல் இருக்கிறது, அது உங்கள் இருவரில் எத்தனை இருக்கிறது என்பது தெரியவரும்5-1521108598  திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள் - இரகசிய டைரி 5 1521108598.

பாவத்தை தொடர வேண்டாம்… மாற்றான் மனைவி மீது ஆசைப்படுவதே தவறு, அவருடன் தொடர்ந்து உறவில் இருக்கிறேன் என்று கூறி பாவத்தை சம்பாதித்துக் கொண்டு அதற்கு பிராயச்சித்தமாக அவளையே கல்யாணம் செய்துக்கொள்கிறேன் என்பது மாபெரும் தவறு.

இதே தவறை உங்கள் வீட்டில் இருக்கும் பெண் யாருக்காவது வேறு ஆண் செய்தால் சும்மா விட்டுவிடுவீர்களா? அல்ல மறுமணம் செய்து வைத்து கொண்டாடுவீர்களா?

எதிர்காலம்!

இந்த உறவை நீங்கள் திருமணத்திற்கு கொண்டு சென்றால் நிச்சயம் ஃபெயிலியரான பிராடக்ட் ரிசல்ட் போல தான் இருக்கும். இதில் உங்கள் எதிர்காலம் மட்டுமின்றி, ஒரு குழந்தைகளின் எதிர்காலமும் இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல், அந்த பிஞ்சுகளின் எதிர்கால வாழ்க்கையையும் சேர்த்து அழிக்க திட்டமிட வேண்டாம்.

நீங்கள் இருவரும் இப்படியான ஒரு உறவில் இருப்பது முதலில் அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியுமா? நீங்கள் கூறுவதை பார்த்தல் தெரியாது தான் போல. அப்படியே விட்டுவிடுங்கள்.

நீங்கள் வேண்டுமானால், ஒரு சில மாதங்கள் கள்ளத்தனமாக உடலுறவில் ஈடுபடாமல் இருந்து பாருங்களேன். நிச்சயம் உங்கள் இருவருக்குள் இருப்பது காதல் அல்ல, மோகம் தான் என்பதை அறிந்துக் கொள்வீர்கள்.

வருத்தம் வேண்டாம்!

இந்த பதில் உங்களுக்கு வருத்தம் வரவழைக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. நீங்கள் இப்போது சுவைத்துக் கொண்டிருப்பது ஹோட்டல் உணவு.

ஹோட்டல் உணவு பிடித்திருக்கிறது என்று அந்த ஹோட்டலையே நீங்கள் விலைக்கு வாங்கிவிட இயலாது. அபப்டியே வாங்கினாலும், அது வீட்டு உணவை போல ஆரோக்கியமாக அமையாது.

நீங்கள் அதையே சுவைக்க துவங்கினால், நிச்சயம் வெகு விரைவில் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். இதை விட மிக எளிமையாக உங்களுக்கு வேறு எப்படியும் கூறி புரிய வைக்க இயலாது.

வேறு கோணம்…2-1521108573  திருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள் - இரகசிய டைரி 2 1521108573

தவறுகள் இருக்க தான் செய்யும். தவறை மனம் சரி என்ற கண்ணோட்டத்தில் இருந்து காணும் அவரை அது தவறு என்பதே நமக்கு தெரியாது. உங்கள் கோணத்தில் இருந்து விலகி, அந்த பெண்ணின் கணவனின் கோணத்தில் இருந்து பாருங்களேன்…

வேண்டாம்… ஒரு மூன்றாம் நபரும் கோணத்தில் இருந்து பாருங்களேன்… நீங்கள் செய்துக் கொண்டிருப்பது மிகவும் கேவலமான விஷயம் என்பதை அறிவீர்கள்.

எப்படியும் உங்களுக்கு வயதை முப்பது அல்லது அதன் அருகாமையில் தான் இருக்கும் என்று கருதுகிறேன். உங்களுக்கான வாழ்க்கை… நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையின் முக்கிய எபிசொட் இனிமேல் தான் துவங்கவிருக்கிறது. வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு நலமாக வாழுங்கள். அந்த பெண்ணையும் அவர் துணையுடன் நலமாக வாழ வழிவிடுங்கள். நல்லதே நடக்கும்!