தனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்

Image result for docterதனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக், நமோ ஆப்ஸ் போன்றவற்றில் இருந்து மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றன என்று புகார்கள் எழுந்தநிலையில், டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைச் சட்டத்தில் கடுமையான பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், விரைவில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் செயல்பாட்டுக்கு் வர உள்ளது. அப்போது, மக்களின் உடல்நலன் சார்ந்த தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இந்த வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில், சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் டிஜிட்டல் தகவல்கள்(டிஐஎஸ்எச்ஏ) வரைவுச் சட்டம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

தனி மனிதரின் உடல்நலன் சார்ந்த தகவல்கள், உளவியல் தகவல்கள், மனநிலை குறித்த விஷயம், பாலினம் தொடர்பான விவரங்கள், உடல்நலன் சார்ந்த அறிக்கைகள், உடல்குறித்த தகவல்கள், பயோ-மெட்ரிக் தகவல்கள் ஆகியவை தனிமனிதரின் அந்தரங்கம் தொடர்புடையவாகும்Image result for docter

இதை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுதல், பகிர்தல் சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றமாகும்.

இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர்க்கு 5 ஆண்டுகள் வரைசிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கலாம்.

மாநிலஅரசின் மின்னணு சுகாதார ஆணையம், தேசிய மின்னணு சுகாதார ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே மட்டும் தகவல்களை பகிரந்து கொள்ளலாம்.

தனது உடல்நலன் சார்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைக்கவும், யாருக்கும் பகிரலாம் என்பதை உரிமையாளர்தான் முடிவு செய்ய வேண்டும். தங்களின் உடல்நலன் சார்ந்த தகவல்களை மற்றவர்களுக்கு கொடுப்பதும், அதை மறுப்பதும் உரிமையாளரின் உரிமையாகும்.

உரிமையாளரின் முறையான அனுமதியில்லாமல் எந்தவிதமான உடல்நலன் தகவல்களையும் யாருக்கும் பகிர்தலும், தெரிவிப்பதும் கூடாது.

மேலும், தனிமனிதரின் உடல்நலன் சார்ந்த தகவல்களை திரட்டுதல், ஒன்றுசேர்த்தல், பாதுகாத்தல், பகிர்தல் போன்றவற்றை சுகாதாரத் திட்டத்துக்கும், நோயாளியின் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சை முறைகளுக்கும், மருத்துமனைகளுக்கு இடையேயும், ஆய்வகங்களுக்கும், மருத்துவக் குழுக்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அதைத் தவிர மற்றவர்களுக்கு அளிக்க அனுமதி இல்லை.

இந்த வரைவு சட்ட மசோதா குறி்த்து கருத்து தெரிவிப்பவர்கள் வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுImage result for docter.