டோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை! வெளிச்சத்திற்கு வந்தது

Image result for டோடோ ராட்சத பறவை1662 ஆம் ஆண்டு அழிந்துபோன டோடோ ராட்சத பறவை, அதிர்ஷ்டம் இல்லாத இந்தப் பறவை பற்றிய சில அறிவியல்பூர்வ உண்மைகள் இந்த ஆயவில் தெரிய வந்துள்ளன.

இந்த ராட்சத பறவையின் எலும்பு மாதிரிகளை வைத்து நடத்திய ஆய்வில், ஆகஸ்ட் மாதம் பொரித்த இந்த பறவையின் குஞ்சு மிக விரைவாக வளர்ந்து பெரிதாகி விடுவது தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் இறகுகள் விழுந்துவிடும் அந்தப் பறவை, கடற்பறவைகளால் வரலாற்று கணக்குகளில் பதிவுசெய்யப்பட்ட பஞ்சு போன்ற சாம்பல் நிற தோலை கொண்டிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிரான்சிஸிலுள்ள அருங்காட்சியகத்திற்கு சமீபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட மாதிரிகள் உள்பட அருங்காட்சியகங்களிலும். சேகரிப்புகளிலும் இன்னும் காணப்படும் டோடோ பறவையின் எலும்புகள் சிலவற்றை ஆய்வில் பயன்படுத்த தென் ஆப்ரிக்காவிலுள்ள கேப் டவுன் பல்கலைகழகத்தை சேர்ந்த டெல்பின் ஆங்ஸ்ட்க்கு வாயப்பு கிடைத்தது.

அவருடைய அணியினர் 22 டோடோ பறவைகளின் எலும்பு துண்டுகளை நுண்ணோக்கியில் பார்த்து, இந்த ராட்சத பறவையின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறைகள் பற்றி ஆய்வு செய்தனர்.

எம்முடைய ஆய்வுக்கு முன்னர் இந்தப் பறவைகளைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தோம்” என்கிறார் ஆங்ஸ்ட்.Image result for டோடோ ராட்சத பறவை

இந்தப் பறவை ஆண்டில் ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது என்றும், அதற்கு பிறகு இறகு உதிர்ந்து விடுகிறது என்றும் எலும்பு திசுவியலை பயன்படுத்தி முதல்முறையாக விளக்க முடிந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத அளவில் பொரித்த இந்தப் பறவையின் குஞ்சுகள் மிக விரைவாக பெரிதாக வளர்கிறது என்று அவற்றின் எலும்புகளின் வளர்ச்சி முறைகளில் இருந்து விஞ்ஞானிகளால் கூறிவிட முடியும்.

நவம்பர் முதல் மார்ச் வரை அந்த தீவை சூறாவாளிகள் தாக்கி, உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியபோது, இந்த பறவைகளின் விரைவான வளர்ச்சி முறை உயிர் வாழ்வதற்கு சாதகமான நிலையை வழங்கியிருக்கலாம்.

இருப்பினும், பெரிதான இந்த பறவைகள் இயற்கையான எந்தவொரு இரையையும் பெற்றுகொள்ள முடியாத சாத்தியக்கூறு நிலவியதால். பாலியல் முதிர்ச்சியை இந்தப் பறவைகள் அடைவதற்கு பல ஆண்டுகள் பிடித்திருக்கலாம்.

பெரிய பறவைகளின் எலும்புகள் தாது உப்புக்களை இழந்திருந்த அறிகுறியையும் காட்டுகின்றன. இனப்பெருக்கத்திற்கு பிறகு இந்த பறவைகள் அவற்றின் பழைய சேதமடைந்த இறகுகளை ஏன் இழந்தன என்பதை இது எடுத்துக்கூறுகிறதுImage result for டோடோ ராட்சத பறவை.

கீழே கருப்பு நிறம் அல்லது சாம்பல் நிற சுருண்ட இறகை கெண்டவை என்று டோடோ பற்றிய முரண்பட்ட தகவல்களை முற்கால கடலோடிகள் வழங்கியுள்ளனர்.

‘சைன்டிஃபிக் ரிப்போட்ஸ்” என்கிற சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் இந்த ஆய்வு, வரலாற்று சான்றுகளோடு வெளியாகியுள்ளது.

“பழுப்பு-சாம்பல் நிறமுடைய டோடோ, தோலுரியும் காலத்தில், உரோமத்துடன், கருப்பு நிற சுருண்ட இறகையை இந்தப் பறவை கொண்டிருந்தது” என்று ஆங்ஸ்ட் விளக்கியிருக்கிறார்.

கடலோடிகள் முற்காலத்தில் எழுதியிருக்கிறவற்றோடு, நாங்கள் எங்களுடைய அறிவியல் முறைகளை பயன்படுத்தி கண்டுபிடித்தவை அனைத்தும் மிகவும் சரியாகப் பொருந்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

முட்டை திருட்டுImage result for டோடோ ராட்சத பறவை

ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த தீவுக்கு மனிதர்கள் வந்து சேர்ந்த 100க்கும் குறைவான ஆண்டுகளில் டோடோ அழிந்துவிட்டதை பற்றியும் இந்த ஆய்வு துப்புகள் வழங்க முடியும்.

டோடோ அழிந்துபோவதற்கு வேட்டையாடுதல் ஒரு காரணம். ஆனால், கப்பல்களில் இருந்து இந்த தீவில் விடப்பட்ட குரங்குகள், மான்கள், பன்றிகள் மற்றும் எலிகள் இந்தப் பறவையின் தலைவிதியை நிர்ணயித்துள்ளன.

டோடோக்கள் தங்களின் முட்டைகளை தரையிலுள்ள கூட்டில் இட்டு வந்ததால், பாலூட்டி விலங்குகளால் அவை பாதிப்புக்குளாகும் நிலையே இருந்திருக்கும்.

முழுமையாக விவரங்கள் தெரியாவிட்டாலும், விலங்குகளாலும், மனிதராலும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான மிகப் பெரிய அடையாளமாக டோடோ உள்ளது என்று டாக்டர் ஆங்ஸ்ட் கூறியுள்ளார்.

“இந்தப் பறவையின் சூழலியல், அந்த நேரத்தில் மொரீஷியஸ் தீவின் சூழலியல் ஆகியவை பற்றி நமக்கு தெரியாவிட்டால் டோடோ அழிவிற்கு மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது பற்றி அறிவது மிகவும் கடினமாகும்” என்று அவர் விளக்கினார்.

“இந்தப் பறவைகளின் சூழலியல் மற்றும் மொரீஷியஸ் தீவின் உலகளாவிய இயற்கைச்சூழல் அமைப்பின் புரிந்துகொண்ட பின்னர், மனிதர் அங்கு வந்தடைந்தபோது செய்த தவறுகள் என்ன? இந்தப் பறவைகள் மிக விரைவாக எவ்வாறு அழிந்து போயின என்று கூற முடியும்” என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

விலகாத மர்மங்கள்

லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்தவரும், இந்த ஆய்வின் இணை ஆய்வாளருமான ஜூலியன் ஹூமே, “டோடோவை சுற்றி இன்னும் பல மர்மங்கள் சூழ்ந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

“எங்களுடைய ஆய்வு, பருவகாலங்களை சுட்டிக்காட்டுகிறது. மொரீஷியஸிலுள்ள காலநிலையின் காரணமாக உண்மையிலேயே இத்தகைய பறவைகளின் வளர்ச்சியினை அவை பாதித்தன என்பதை காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தீவு அடிக்கடி புயல்களால் பேரழிவுக்குள்ளாகும் சூறாவளி காலத்தில், எல்லா பழங்களும், இலைகளும் மரங்களிலிருந்து விழுந்துவிடுகின்றன. அச்சமயம் மொரிஷியஸிலுள்ள பாம்புகள் மற்றும் பறவைகளான விலங்கினங்களுக்கு மிகவும் மோசமான காலமாகும்.

புறா குடும்பத்தோடு தொடர்புடைய டோடோ, மொரீஷியஸில் பரிணமித்தது.

இருப்பினும், எலும்பு மாதிரிகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதால், அவற்றின் பரிணாம வளர்ச்சியை தடங்காண்பது மிகவும் கடினமாக உள்ளது.

டோடோ பறவையின் பல எலும்பு மாதிரிகள் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் சென்றடைந்தாலும், அவற்றில், பெரும்பாலானவை தெலைந்துவிட்டன அல்லது விக்டோரியா காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டனImage result for டோடோ ராட்சத பறவை