டைம் 100’ பட்டியலில் மோடி

Image result for டாப் 100 LEADERSஅமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.

டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘அந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்’ தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான 100 பேர் பட்டியலை அந்த இதழ் வெளியிடும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் பிரபலமான 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ள இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ட்ரம்பின் மகள் இவாங்கா, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், பிரிட்டன் இளவரசர் வில்லியம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோரின் பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் இருந்து டைம் இணையத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் மற்றும் டைம் இதழின் ஆசிரியர் குழு பரிசீலனை அடிப்படையில் 100 பேரில் ஒருவர் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட உள்ளார்.Image result for MODI